சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த ராஜேஸ்வரி, தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பேசுபொருள் ஆகி உள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் அருணிற்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் ராஜேஸ்வரி. இவர் விஷால், விஜய் ஆண்டனி உடன் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் ராஜேஸ்வரி இருந்துள்ளார். இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்களாம். இவர்களுக்கு ஹேமந்த் குமார் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் சதீஷ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், ராஜேஸ்வரிக்கும், அவரது கணவருக்கு கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
24
ராஜேஸ்வரி மரணம்
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 7-ந் தேதி சதீஷ், ராஜேஸ்வரி இருவருக்கும் வழக்கம்போல தகராறு ஏற்பட, மறுநாள் நடிகை ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு சைதாப்பேட்டை விஐபி சாலையில் உள்ள தன்னுடைய அம்மாவீட்டுக்கு சென்றிருக்கிறார். கடந்த 3 நாட்களாகவே மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி, 11ம் தேதி இரவு தன்னுடைய அம்மா வீட்டில் இருந்த ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனால் சிறிது நேரத்திலேயே அவர் மயக்கம் போட்டு விழுந்துவிட, அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
34
ராஜேஸ்வரி வெளியிட்ட கடைசி வீடியோ
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி 12ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கடைசியாக வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “என்னைப்பற்றி ஏதாவது கேள்விப்பட்டினா, எப்படி? தப்பா கேள்விப்பட்டீனா தயவு செஞ்சு நம்பிடு. நான் அப்படியில்ல... இப்படிதான்னு ப்ரூ பண்ண வேண்டிய அவசியமில்லை. அதுக்கான டைமும் என்கிட்ட இல்லை. உன் பார்வைக்கு நான் கெட்டவனாக தெரிந்தால், நான் கெட்டவனாகவே இருந்துக்குறேன்” என்கிற டயலாக்கை பேசி ரீல்ஸ் போட்டுள்ளார்.
ராஜேஸ்வரி மரணம் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜேஸ்வரியை அவரது கணவர் சந்தேகப்பட்டு, கொடுமைப்படுத்தினாரா? அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு ராஜேஸ்வரி இப்படி ஒரு முடிவை எடுத்தாரா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ராஜேஸ்வரியின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் குடுமப்த்தினரும் ராஜேஸ்வரி மரணத்தை சோகத்தில் மூழ்கி உள்ளனர்.