திடீரென உதட்டை பிடித்து... 5 நிமிடங்கள் விடாமல் லிப்கிஸ் அடித்த ஹீரோ - ஜெமினி கணேசன் மகளுக்கு நேர்ந்த கொடுமை

Published : Oct 10, 2022, 02:54 PM IST

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளான ரேகா, தனது 15-வது வயதில் அஞ்சனா சஃபர் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

PREV
14
திடீரென உதட்டை பிடித்து... 5 நிமிடங்கள் விடாமல் லிப்கிஸ் அடித்த ஹீரோ - ஜெமினி கணேசன் மகளுக்கு நேர்ந்த கொடுமை

தமிழ் ரசிகர்களால் காதல் மன்னன் என அழைக்கப்படும் ஜெமினி கணேசன் - தெலுங்கு நடிகை புஷ்பவல்லி ஆகியோரின் மகள் தான் ரேகா என்கிற பாணு ரேகா. சென்னையில் பிறந்த இவர் ரஜ்ஹோலா ரத்னம் என்கிற தெலுங்கு படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கோதல்லி சிஐடி 999 என்கிற படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்தார். 

24

தனது 15-வது வயதில் அஞ்சனா சஃபர் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் ரேகா. அன்று தொடங்கி இன்று வரை கதாநாயகியாக, சிறந்த குணச்சித்திர நடிகையாக பாலிவுட்டை கலக்கி வருகிறார். இந்நிலையில், தற்போது அவரது சுயசரிதை புத்தகத்தை யசீர் உஸ்மான் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தான் நடித்த முதல் பாலிவுட் படமான அஞ்சனா சஃபர் திரைப்படத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்துள்ளார் ரேகா.

இதையும் படியுங்கள்... விதிகளை மீறி குழந்தை பெற்றதாக புகார்... நயன்தாராவிடம் விசாரணை நடத்தப்படுமா? - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

34

அதன்படி அஞ்சனா சஃபர் படத்தில் பெங்காலி நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேகா. அப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 15 தான். அப்போது ரேகாவிடம் தெரிவிக்காமலே அப்படத்தின் இயக்குனர் ராஜா நவாதே ஒரு 5 நிமிட முத்தக் காட்சியை படமாக்கினாராம். இந்தக் கொடுமை குறித்து பேசியுள்ள ரேகா, இயக்குனர் ராஜா நவாதே ஆக்‌ஷன் சொன்னதும் நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜி சட்டென என் உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

44

இயக்குனர் கட் செய்ய சொல்லாததால் 5 நிமிடங்கள் எனக்கு லிப்கிஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார் பிஸ்வஜீத் சாட்டர்ஜி. அப்போது நான் அழுது கண்ணீர் சிந்தினேன். அதைக் கூட கவனிக்காமல் படக்குழுவினர் கேமராவுக்கு பின்னால் இருந்துகொண்டு கை தட்டியும், விசில் அடித்தும் சிரித்தனர். இப்படி ஒரு காட்சி எடுக்கபோவதாக இயக்குனர் ரேகாவிடம் சொல்லவே இல்லையாம்.

இதுகுறித்து பிஸ்வஜீத் சாட்டர்ஜி கூறுகையில், இது முழுக்க முழுக்க இயக்குனரின் ஐடியா என்றும், எதிர்பாராமல் முத்தம் கொடுப்பதே கதைக்கு தேவைப்பட்டதாகவும், அதையே இயக்குனர் செய்ய சொன்னதாகவும் கூறி உள்ளார். இத்தனை ஆண்டுகளாக இதனை வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த ரேகா தற்போது தனது சுயசரிதை மூலம் அதுகுறித்து மனம்விட்டு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அப்போ ரூ.12 கோடி... இப்போ ரூ.2000 கோடி - ராஜமவுலி பாக்ஸ் ஆபிஸின் ‘பாகுபலி’ ஆன கதை தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories