Laila: லைலாவுக்கு இப்படி ஒரு வினோதமான பிரச்சனை இருக்கா? பிதாமகன் ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன ஆச்சு தெரியுமா?

Published : Mar 04, 2025, 01:16 PM IST

Laila Have a Rare Problem: லைலா தனக்கு இருக்கும் வினோதமான பிரச்சனை குறித்து பேசி தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அப்படி என்ன பிரச்சனை என்று தெரிந்தால் நீங்களே ஆச்சயப்பட்டு போவீர்கள்.  

PREV
15
Laila: லைலாவுக்கு இப்படி ஒரு வினோதமான பிரச்சனை இருக்கா? பிதாமகன் ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன ஆச்சு தெரியுமா?

கோவாவில் பிறந்து வளர்ந்த பொண்ணு தான் நடிகை லைலா. 'துஷ்மன் துனியா கா' என்ற பாலிவுட் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர், அதே வேகத்தில் மலையாளத்தில் 'இத ஒரு சினேகாகதா' என்ற படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் விஜயகாந்த் நடித்த 'கள்ளழகர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தடார்ந்து ரோஜாவனம், முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளி தந்த வானம், உன்னை நினைத்து, காமராசு, பிதாமகன் என்று பல ஹிட் படங்களில் நடித்தார்.
 

25
வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்த லைலா:

கடைசியாக 2006 ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்திருந்த லைலா, வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்தே முழுமையாக விலகினார். லைலாவின் கணவர் ஈரானை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையின் தான் 2022 ஆம் ஆண்டு, இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி , ராஷி கண்ணா, ரஜீஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'சர்தார்' படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். 

Sabdham : சவுண்டை வைத்து பயம் காட்டினார்களா? பல்பு வாங்கினார்களா? சப்தம் விமர்சனம் இதோ

35
கோட் படத்தில் பிரஷாந்துக்கு ஜோடி

இந்தப் படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பிரசாந்திற்கு மனைவியாகவும், மீனாட்சி சவுத்திரியின் அம்மாவாகவும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஒரு சில சீன்களில் மட்டுமே தலைகாட்டினார்.

45
சப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார்

இதை தொடர்ந்து, இவரது கடந்த வாரம் வெளியான சப்தம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.    90ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த லைலா... தற்போது தனக்கு உள்ள வினோதமான பிரச்சனை குறித்து பேசி பலரையும் ஆச்சர்யப்பட செய்துள்ளார். அதாவது, இவர் எந்நேரமும் சிரித்து கொண்டு தான் இருப்பாராம்.

Laila : அட லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா? அன்னையர் தினத்தை கொண்டாடும் Family - லைலாவின் பதிவு வைரல்!

 

55
நடிகை லைலாவுக்கு இருந்த வினோதமான பிரச்சனை

இவரை கவனித்த விக்ரம், பிதாமகன் சூட்டிங்ஸ்பாட்டில் ஒரு நிமிடம் மட்டும் சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று லைலாவிடம் சேலஞ்ச் செய்திருக்கிறார். ஆனால், லைலா 30 வினாடிகளில் அழ ஆரம்பித்து விட்டாராம். இதனால் அவர் ஷூட்டிங்கிற்கு தயாராக போடப்பட்டிருந்த மேக்கப் எல்லாம் கலைந்து போய் விட்டதாம். இதற்கு காரணம் லைலா சிரிக்காமல் இருந்தால், ஆட்டோமேட்டிக்கா கண்ணிலிருந்து தண்ணீர் வந்துவிடுமாம். அதாவது அவர் தன்னையே அறியாமல் அழுதுவிடுவாராம். அப்படியொரு விசித்திரமான பிரச்சனை லைலாவிற்கு இருக்கிறதாம். இதை கேட்டு தான் இப்போது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்காங்க.

click me!

Recommended Stories