இதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், மிகவும் சுவாரசியம் குறைவாக விளையாடிய இருவரை தேர்வு செய்ய சொல்கிறார் பிக்பாஸ்.
அந்த வகையில் இதில் ஆரி, ரியோ, சோம் ஆகியோர் ஷிவானியை ஒரு சில குற்றங்களை முன்வைத்து நாமினேட் செய்கிறார்கள் என தெரிகிறது.
அர்ச்சனா, எப்படி பட்ட ஸ்டேடர்ஜி சொல்லனாலும் அதனை ஆரி ஏற்க மறுத்தார் என, அவரது பெயரை கூறுகிறார்.
பின்னர் அனிதா, ரம்யா, பாலாஜி, சோம் ஆகியோர்கள் கேப்ரில்லாவைய நாமினேஷன் செய்கின்றனர்.
இதனையடுத்து அதிகபட்சமாக நாமினேட் செய்யப்பட்ட ஷிவானி, கேபி சிறைக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் தான் சிறைக்கு செல்வது குறித்து சிறைக்கு செல்லும் முன் ஷிவானி ’நாமினேஷன் ஓகே ஆனால் குற்றச்சாட்டுகள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை’ என கோபத்துடன் கூறுகிறார்.
இதனை அடுத்து இந்த வார கேப்டனான ரம்யா இருவரையும் சிறையில் அடைக்கும் காட்சியோடு இன்றைய இரண்டாம் புரோமோ முடிவுக்கு வருகிறது.