சித்ரா தற்கொலையில் விலகுமா மர்மம்?... ஹேமந்திடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. தீவிர விசாரணை...!

First Published | Dec 17, 2020, 12:21 PM IST

சித்ரா தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஹேமந்திடம் ஆர்.டி.ஓ. இன்று விசாரணை நடத்தி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து நசரத் பேட்டை பொலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் அவரை ஹேமந்த் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
Tap to resize

கடந்த 14ம் தேதி முதல் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார். முதல் நாளில் சித்ராவின் தாய், தந்தை, அக்கா உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் தாயார் விஜயா, தன் மகள் சாவுக்கு ஹேமந்த் தான் காரணம் என குற்றச்சாட்டினார்.
இந்நிலையில் போலீசார் நடத்தி வந்த விசாரணையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 14ம் தேதி இரவு ஹேமந்த் கைது செய்யப்பட்டார். தற்போது பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த், ஆர்.டி.ஓ. விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஹேமந்தை விசாரணைக்கு ஆஜர்படுத்தும் படி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

Latest Videos

click me!