“மாஸ்டர்” முன்பு மண்டியிட்ட “சுல்தான்”... பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்க காரணம் இதுவா?

First Published Dec 17, 2020, 1:03 PM IST

இந்நிலையில் பொங்கலுக்கு ‘சுல்தான்’ படத்தை வெளியிடப்போவதில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. வசூல் ரீதியாக ‘பிகில்’ திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேபோல் வசூல், விமர்சன ரீதியாக ‘கைதி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
undefined
‘கைதி’ படத்தின் வெற்றியைப் பார்த்து தான் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு லோகேஷ் கனகராஜை ஓ.கே.செய்தார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
undefined
பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கார்த்தியின் ‘சுல்தான்’ படமும் அன்றைய தினமே வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கடந்த ஆண்டு தீபாவளியைப் போலவே விஜய், கார்த்தி படங்கள் மோத உள்ளதாக கூறப்பட்டது.
undefined
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
undefined
முழுக்க குடும்ப பிண்ணனியில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து பண்டிகைக்கு படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருந்தார்.
undefined
கொரோனா காலத்தில் தியேட்டர்களில் கூட்டம் கூடாததால் ‘மாஸ்டர்’ பட ரிலீஸை தியேட்டர் உரிமையாளர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்களில் கூட படத்தை ரிலீஸ் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.‘சுல்தான்’ படத்திற்கு 300 தியேட்டர்களை மட்டுமே ஒதுக்க உள்ளதாக தெரிகிறது.
undefined
இந்நிலையில் பொங்கலுக்கு ‘சுல்தான்’ படத்தை வெளியிடப்போவதில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தியேட்டர் எண்ணிக்கை மற்றும் மாஸ்டர் பட ரிலீஸ் காரணமாகவே பொங்கல் ரேஸில் இருந்து சுல்தான் ஒதுக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
undefined
click me!