என் தந்தையை வீரப்பன் கடத்துனப்போ... சூப்பர்ஸ்டார் செஞ்ச உதவி இருக்கே - ஷிவ ராஜ்குமார் எமோஷனல் பேச்சு

First Published | Aug 18, 2023, 8:43 AM IST

கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ஷிவ ராஜ்குமார், நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவி குறித்து பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.

Rajinikanth, Shivarajkumar

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ஷிவ ராஜ்குமார். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் தான் ஷிவ ராஜ்குமார். இவரது தம்பி புனித் ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழ்நாட்டில் ரசிகர்கள் ரஜினியை எப்படி கொண்டாடுகிறார்களோ, அந்த அளவுக்கு கர்நாடகாவில் மாஸ் ஆன ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஷிவ ராஜ்குமார். இவர் தற்போது பான் கோலிவுட்டிலும் பேமஸ் ஆகிவிட்டார். இதற்கு காரணம் ஜெயிலர் திரைப்படம் தான்.

Rajinikanth, Shivarajkumar

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படத்தில் நரசிம்மா என்கிற கேங்ஸ்டர் ரோலில் நடித்திருந்தார் ஷிவ ராஜ்குமார். இவரும் படத்தில் இரண்டே சீன் தான். ஆனால் அந்த 2 சீனிலேயே தன்னுடைய மாஸை நிரூபித்துவிட்டார் ஷிவாண்ணா. அதிலும் கிளைமாக்ஸில் வில்லன் விநாயகனை ஒரே பார்வையில் கதறவிடும் காட்சியெல்லாம் வேற ரகம் என்று தான் சொல்ல வேண்டும்.


Rajinikanth, Shivarajkumar

ஷிவாண்ணாவின் இந்த மாஸ் கேமியோவால் ஜெயிலர் திரைப்படம் கர்நாடகாவிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அம்மாநிலத்தில் மட்டும் இப்படம் சுமார் ரூ.50 கோடி வசூலை நெருங்கி உள்ளது. ஜெயிலர் படம் இந்த அளவு வசூலிக்க ஷிவாண்ணாவின் ஐந்து நிமிட கேமியோ ரோல் தான் முக்கிய காரணம். ஜெயிலர் படத்தில் தனது ரோலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால் ஷிவ ராஜ்குமார் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... இமயமலை பயணம் ஓவர்.. அடுத்து "தலைவர் 170" ஷூட்டிங் தான்.. அமிதாப்பச்சன் தான் வில்லனா? ருசிகர அப்டேட்!

Shivarajkumar

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் ரிலீசுக்கு பின்னர் ரஜினி சார் போன் போட்டாரா என ஷிவ ராஜ்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷிவாண்ணா, அவர் தற்போது ஊரில் இல்லை இமயமலைக்கு சென்றிருக்கிறார். அவர் சென்னைக்கு வந்ததும் முதல் ஆளாக அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக சென்னையிலேயே தங்கி இருப்பதாக கூறி இருக்கிறார். அதோடு தன் தந்தையை வீரப்பன் கடத்தியபோது ரஜினி செய்த உதவி குறித்தும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார் ஷிவாண்ணா.

கன்னட திரையுலக ஜாம்பவான் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திய சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் தங்கள் குடும்பத்துக்கு நிறைய உதவிகள் செய்ததாகவும், அதை என்றென்றும் மறக்கவே மாட்டேன் எனவும் பேசி சூப்பர்ஸ்டார் மீதுள்ள தனது அன்பை பொழிந்துள்ளார் ஷிவாண்ணா. அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி! கப்பு சிப்புனு கட் செய்த இசைப்புயல்!

Latest Videos

click me!