அச்சத்தின் உச்சத்தில் திரையுலகம்... பிரபல நடிகையின் ஒரு வயது மகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்திற்கே கொரோனா...!

Published : May 07, 2021, 03:41 PM IST

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
18
அச்சத்தின் உச்சத்தில் திரையுலகம்... பிரபல நடிகையின் ஒரு வயது மகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்திற்கே கொரோனா...!

பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகையும் கலக்கியவர் ஷில்பா ஷெட்டி, 45 வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக பராமரித்து வரும் இவரை பாலிவுட்டின் பியூட்டி குயின் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

28

2019ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ராஜ் குந்தராவை காதலித்து கரம் பிடித்த ஷில்பா ஷெட்டிக்கு வியான் ராஜ் குந்த்ரா என்ற 7 வயது மகன் உள்ளார். கடந்த ஆண்டு வாடகை தாய் மூலமாக ஷில்பா ஷெட்டி சமிஷா ஷெட்டி என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். 
 
38

சமீபத்தில் தான் ஷில்பா ஷெட்டி குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

48

அந்த பதிவில் கடந்த 10 நாட்கள் எங்களுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமானது. முதலில் என்னுடைய மாமனார், மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து மகள் சமிஷா, மகன் வியான் ராஜ், என்னுடைய அம்மா ஆகியோருக்கு தொற்று உறுதியானது. கடைசியாக எனது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அவர்களுடைய அறைகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

58

எங்கள் வீட்டில் பணியாற்றிய 2 ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடவுள் கிருபையால் அனைவரும் நல்ல முறையில் குணமடைந்து வருகின்றனர். 

68

எனக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முறையாக பின்பற்றி வருகிறோம். மும்பை மாநகராட்சி, அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி. ।

78

அனைவரது அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. உங்களுடைய பிரார்த்தனைகளை தொடருங்கள். கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள், கைகளை கழுவுங்கள், பாதுகாப்பாக இருங்கள். கொரோனா பாசிட்டிவ் இல்லாவிட்டாலும் சரி, நீங்கள் எப்போதும் பாசிட்டிவாக இருக்கங்கள் என ஷில்பா ஷெட்டி கோரிக்கை வைத்துள்ளார். 

88

ஒரு வயது மகள், 7 வயது மகன் என பிரபல நடிகையின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாலிவுட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!

Recommended Stories