கோலிவுட் திரையுலகை ஆட்டி படைக்கும் கொரோனா... இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு தொற்று உறுதி!

First Published May 7, 2021, 1:04 PM IST

திரைபிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைவரையும் வாட்டி வதக்கி வரும் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான, கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக இவர்களது மகன் சாந்தனு, ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா தொற்று காரணமாக திரையுலகினர் அடுத்தடுத்து பாதிக்கப்படுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் டூ கோலிவுட் வரை பாகுபாடு பார்க்காமல் திரையுலகினரை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது.
undefined
கொரோனா முதல் பரவலைப் போலவே 2வது அலையிலும் திரையுலகினர் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவில் ஆரம்பித்து மாதவன், அதர்வா மற்றும் நடிகைகள் பூஜா ஹெக்டே, நந்திதா ஸ்வேதா, சமீரா ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
undefined
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றிலிருந்து பூரண நலமடைந்தார். அதே சமயத்தில் தமிழ் திரையுலகின் பிரபல கேமராமேனும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
undefined
அவரை தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்க பட்ட நடிகர் பாண்டு மற்றும் ஆட்டோகிராப் பட பிரபலம் கோமகன் ஆகியோரும் கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தந்தது, அதிர்ச்சியில் இருந்து இன்னும் திரையுலகினர் பலர் வெளியே வரவில்லை.
undefined
தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தங்களை தனிமை படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருவதாக இவர்களது மகன் சாந்தனு தெரிவித்துள்ளார்.
undefined
பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரிடமும் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
undefined
தொடர்ந்து கோலிவுட் திரையுலகை சேர்த்த பிரபலங்கள், மற்றும் பொது மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருவது, இரண்டாவது அலை எவ்வளவு தீவிரமாக பரவி வருகிறது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!