ஒரு படத்திலேயே சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு சென்றுவிடும் கோலிவுட் நாயகிகள் பலர் மத்தியில் , 18 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் த்ரிஷா.
தற்போது த்ரிஷாவிற்கு 38 வயதாகும் நிலையில் ரசிகர்களுக்கு எல்லாம் ஒரே கவலை மட்டும் தான், அது அவருடைய கல்யாணம் எப்போது என்பது தான்.
த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கு 2015ம் ஆண்டு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அந்த திருமணம் நடைபெறாமல் இடையிலேயே கடைவிடப்பட்டது.
கடந்த ஆண்டு கூட த்ரிஷாவும், சிம்புவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் என்றும் கொளுத்திப்போடப்பட்டது. ஆனால் இருவரும் வெறும் நண்பர்கள் தான், திருமணம் என்பது எல்லாம் வெறும் வதந்தி என்றும் அதிகாரப்பூர்வ விளக்கம் கொடுத்து ஆஃப் செய்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகையும், த்ரிஷாவின் தோழியுமான சார்மி த்ரிஷாவுக்கு சொன்ன பிறந்த நாள் வாழ்த்து மூலமாக ஒரு மிகப்பெரிய ரகசியத்தையே உடைத்திருக்கிறார்.
த்ரிஷாவின் 38வது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ள சார்மி, த்ரிஷா பேச்சிலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இது என கூறியுள்ளார். இதன் மூலம் த்ரிஷாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் நடந்துவிடும் என்பதை சூசமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.