ஆப்பாக மாறிய ஆசை! 40 வயசாகியும் திருமணம் செய்து கொள்ளாத ஷங்கர் பட ஹீரோயினா இது?

First Published | Dec 2, 2024, 7:05 PM IST

ஷங்கர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் நாயகியாக அறியப்படும் பிரபல நடிகையின் சிறிய வயது புகைப்படம் தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது .
 

Sadha Adorable pic

முதல் படமே வெற்றி பெறும் யோகம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே அமைகிறது. அதன் பின்னர் முன்னணி நடிகையாக அவர்கள் மாறினாலும் சில காரணங்களால் தங்களுடைய கேரியரையே தொலைத்து விடுகின்றனர். அப்படி கதையின் கதாநாயகியாக நடிக்க ஆசை பட்டு, மோசம் போன பிரபல நடிகை சதாவின் குழந்தை பருவ புகைப்படங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

Sadha with Mother

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி பகுதியில் பிறந்தவர் சதா. இவருடைய உண்மையான பெயர் சதாப் முகமத் சையத் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை சதா என மாற்றிக்கொண்டார். 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனர் தேஜா தயாரித்து - இயக்கிய 'ஜெயம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் இவருக்கு ஜோடியாக நடிகர் நிதின் நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபார் விருது உள்ளிட்ட சில விருதுகள் சதாவுக்கு கிடைத்தன.

மத் தீவில் பங்களா; விதவிதமான கார் என ராஜ வாழ்க்கை வாழும் விக்ராந்த் மாஸ்ஸியின் சொத்து மதிப்பு!

Latest Videos


Actress Sadha

இதைத்தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சதாவுக்கு, தமிழில் நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் எப்படி 'ஜெயம்' படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டாரோ, அதேபோல் தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார் சதா. 

Sadha Childhood Pics

இதன் பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடிக்க துவங்கினார் சதா. குறிப்பாக தமிழில் சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அந்நியன் படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சாதனை முன்னணி கதாநாயகியாக உயர்த்தியது.

ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்; விஜய்க்கு கொடுத்து ஹிட்டாக்கிய யுகபாரதி!

sadha School Days photos

மேலும் மாதவனுக்கு ஜோடியாக எதிரி, பிரியசகி, அஜித்துடன் திருப்பதி, வினையுடன் உன்னாலே உன்னாலே போன்ற பல படங்களில் நடித்தார். ஹிந்தி, மற்றும் கண்டத்தில் வாய்ப்புகள் வர துவங்கிய பின்னர் தமிழ் படங்களை தவிர்த்தார் சதா. இதுவே இவருக்கான ரசிகர்கள் குறைய காரணமானது. மேலும் 2018-ஆம் ஆண்டு கதையின் நாயகியாக நடிக்க ஆசை பட்ட சதாவுக்கு அதுவே ஆப்பாகவும் மாறியது. 
 

Sadha Tourch Light Movie

இயக்குனர் அப்துல் மஜித் என்பவர் இயக்கத்தில், நடித்த டார்ச் லைட் படத்தில் சதா விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்ற நிலையில், இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்த சாதவை யாரும் படங்களில் கமிட் செய்ய தங்கியதாக கூறப்பட்டது. 5 வருடங்களுக்கு மேலாக பட வாய்ப்புகள் இல்லாமல், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஷோ நடுவராக இருந்த சதா, கடந்த ஆண்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தார்.
நெப்போலியன் பாணியில் குடும்பத்துக்காக 37 வயதில் ஓய்வை அறிவித்த முன்னணி நடிகர்!

Sadha Latest Photos

40 வயதை கடந்த பின்னரும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை சதா, தன்னுடைய அம்மாவுடன் சிறிய வயதில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

click me!