ஹீரோயினி to பாடகி.. ஷங்கர் மகள்..தமனுடன் இசை உலகில் புகும் விருமன் நாயகி.. எந்த படத்திற்கு தெரியுமா?

Published : Feb 07, 2022, 06:13 PM IST

நாயகியாக வலம் வரும் ஷங்கர் மகள் அதிதி தற்போது பாடகி ஆகியுள்ளார். இவர் பாடியுள்ள முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.. 

PREV
18
ஹீரோயினி to பாடகி.. ஷங்கர் மகள்..தமனுடன் இசை உலகில் புகும் விருமன் நாயகி.. எந்த படத்திற்கு தெரியுமா?
Aditi Shankar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் விருமன். இப்படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கி உள்ளார். 

28
Aditi Shankar

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். 

38
Aditi Shankar

இப்படத்தில், மதுரை பெண்ணாக நடித்துள்ளார் அதிதி. தேன்மொழியாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

48
aditi shankar

மேலும் 'விருமன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை அதிதி கவர்ந்து விட்டதால் படம் வெளியாவதற்கு முன்பே இவருக்கான ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது.

58
aditi shankar

இதையடுத்து கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் (Aditi Shankar) ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

68
aditi shankar

இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அதிதி.

78
aditi shankar

இந்நிலையில் நாயகியாக வளம் வரும் ஷங்கர் மகள் தற்போது பாடகி ஆகியுள்ளார். இவர் பாடியுள்ள முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.. 

88
aditi shankar

தெலுங்கில் தயாராகி வரும் கானி படத்தில்  வருண் தேஜ்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலை இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி பாடியுள்ளார்..

Read more Photos on
click me!

Recommended Stories