தல மனைவியா இருந்தாலும்... தலைவரின் வெறித்தனமான ரசிகை! மகனுடன் 'அண்ணாத்த' படம் பார்த்த ஷாலினி அஜித்!

Published : Nov 06, 2021, 03:35 PM IST

அஜித்தின் (Ajith) மனைவி ஷாலினி (Shalini) சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் மகன் ஆத்விக்குடன் சென்று, 'அண்ணாத்த' படத்தை (Annaatthe movie) பார்த்துள்ளார். இவர் ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
16
தல மனைவியா இருந்தாலும்... தலைவரின் வெறித்தனமான ரசிகை! மகனுடன் 'அண்ணாத்த' படம் பார்த்த ஷாலினி அஜித்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளி தினத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றாலும், குடும்பத்து படம் பார்க்க வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

26

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டிரெய்லர் என ஒவ்வொன்றும் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அலாதியாகவே இருந்தது. ஆனால் இந்த படத்தில் தலைவரின் மாசை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே...

 

36

படத்திற்கு எதிராக சில விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து திரையரங்கிற்கு படை எடுத்து தான் வருகிறார்கள்.

 

46

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்... குழந்தை நட்சத்திரமாக நடித்த அஜித்தின் மனைவியும் தலைவரின் தீவிர ரசிகையுமான ஷாலினி அஜித் தலைவரின் 'அண்ணாத்த' படத்தை சத்தியம் திரையரங்கில் தன்னுடைய மகனுடன் சென்று பார்த்துள்ளார்.

 

56

இதனை உறுதி செய்யும் விதமாக, ஷாலினியுடன் அஜித் எடுத்து கொண்ட புகைப்படத்தை ரசிகர் ஒருவர் வெளியிட்டு, தலைவா என கத்தி 'அண்ணாத்த' படத்தை மகனுடன் ரசித்து பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

 

66

என்னதான் தல மனைவியா இருந்தாலும், வெறித்தனமான தலைவரின் ரசிகை என்பதை நிரூபித்துள்ளார் ஷாலினி. இவர் ரசிகருடன் திரையரங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

click me!

Recommended Stories