Annaatthe Vs Enemy Box office collection: 'அண்ணாத்த' மற்றும் 'எனிமி' படத்தின் 2 ஆவது நாள் வசூல் நிலவரம் இதோ..!

Published : Nov 06, 2021, 12:15 PM IST

இந்த வருட தீபாவளியை சிறப்பிக்கும் (Diwali Movies) விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) 'அண்ணாத்த' (Annaatthe) மற்றும் 'எனிமி' (Enemy) ஆகிய இரண்டு படங்கள் வெளியான நிலையில், இந்த படங்களின் 2 ஆவது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
16
Annaatthe Vs Enemy Box office collection: 'அண்ணாத்த' மற்றும் 'எனிமி' படத்தின் 2 ஆவது நாள் வசூல் நிலவரம் இதோ..!

பல ஆண்டுகளுக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் தீபாவளி திருநாளில் வெளியாகிறது என்கிற தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட பல படங்கள் தலைவருடன் மோதி ஜெயிக்க முடியுமா? என்கிற சந்தேகத்துடன் ஜகா வாங்கியது.

 

26

ஆனால் ஆர்யா - விஷால் நடிப்பில் உருவாகி இருந்த 'எனிமி' படத்தின் கதை மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக தீபாவளி ரேஸில் இறக்கி விட்டனர் படக்குழுவினர்.

 

36

'அண்ணாத்த' திரைப்படம் தமிழகம், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் அதிகமான திரையரங்குகளில் வெளியானதால்,  எனிமிக்கு மிக குறைவான திரையரங்குகளே கிடைத்தது.

 

46

முதல் நாள் வசூல் நிலவரப்படி, அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 70 கோடிக்கு வசூல் செய்ததாக கூறப்பட்டது. 'அண்ணாத்த' படத்தின் மீது இருந்த, எதிர்பார்ப்பே இவ்வளவு வசூல் செய்ய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

56

ஆனால் தொடர்ந்து 'அண்ணாத்த' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது நாளான நேற்று, தமிழகத்தில் மட்டும் 20 கோடி இப்படம் வசூல் செய்துள்ளதாம்.

 

66

தலைவரை எதிர்த்து துணிந்து தீபாவளி ரேஸில் இறங்கிய, எனிமி திரைப்படம் இரண்டாவது நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 3 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாய்க்கியுள்ளது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories