தங்கை ஷாமிலியுடன் செலபிரேஷன் மோடில் அஜித்தின் ஆசை மனைவி ஷாலினி! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published | Jun 22, 2023, 11:56 PM IST

தங்கை ஷாமிலியுடன், அஜித்தின் காதல் மனைவி ஷாலினி எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது  வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நிலையில், அவ்வப்போது ரசிகர்கள் யாரும் எதிர்பாராத நேரம், தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமான சில புகைப்படங்களை வெளியிட்டு வருவது மட்டும் இன்றி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், மற்றும் தங்கையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, எதோ விசேஷம் ஒன்றில்... ஷாலினி கலந்து கொண்டுள்ள நிலையில், அப்போது ஆசை தங்கை ஷாமிலியுடன், இவர் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் ஷாலினி வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.

82 கிலோ முதல்... 352 கிலோ வரை..! 45 வயதிலும் ஒர்கவுட்டில் அசால்ட் செய்யும் ஜோதிகா! வெறித்தனமான வீடியோ!
 

Tap to resize

இந்த புகைப்படத்தில், ஷாமிலி வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் சல்வார் அணிந்துள்ளார். ஷாலினி கருப்பு நிற சல்வாரில் உள்ளார். குறிப்பாக இந்த போட்டோவில் ஷாலினி இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். 40 வயதை கடந்த பின்னரும் செம்ம ஃபிட்டாக உள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் கமெண்டில் அஜித்தின் புகைப்படத்தையும் பதிவிடும் படி ரசிகர்கள் பலர் ஷாலினிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பூனேவில் துவங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித்தின் இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா 5-ஆவது முறையாக இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

'லியோ' படப்பிடிப்பின் போது.. காஷ்மீரில் தளபதியுடன் எடுத்த புகைப்படம் வெளியிட்டு பர்த்டே வாழ்த்து கூறிய த்ரிஷா!

Latest Videos

click me!