Shakeela Emotional Speech about 25 Years Cinema Life : பிரபல நடிகை ஷகீலா, சமீபத்திய பேட்டி ஒன்றில் திரையுலகில் சந்தித்த கஷ்டங்களைப் பகிர்ந்துள்ளார். உச்சத்தில் இருந்தபோது தனிமை, விருது விழாக்களுக்கு அழைக்கப்படாதது போன்றவற்றை கூறியுள்ளார்.
மலையாளத் திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது, சக நடிகர்களிடமிருந்து பொறாமையையும் தனிமையையும் சந்தித்ததாக ஷகீலா கூறினார். யாரும் தன்னிடம் நட்பு பாராட்ட முன்வரவில்லை என்றார். படப்பிடிப்பு தளங்களில் தன்னை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி வைத்தனர். தனக்கென தனி அறை ஒதுக்கப்படும். இந்த பாகுபாட்டால், சொந்த செலவில் 20 கேரவன்களை வாங்கிப் பயன்படுத்தியதாகக் கூறினார்.
23
அனைவரிடமிருந்தும் விலகி..
தனது 25 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு விருது விழாவுக்குக் கூட தன்னை அழைக்கவில்லை என ஷகீலா வேதனைப்பட்டார். திறமையானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, மும்பை நடிகைகளுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுகிறது. நெல்லூர், விஜயவாடா போன்ற பகுதிகளில் திறமையான பெண்கள் பலர் உள்ளனர், அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். வெளி உலகம் என்ன சொன்னாலும் கவலை இல்லை, குடும்பமே முக்கியம் என்றார்.
33
காஸ்டிங் கவுச் பற்றி..
தனக்கு காஸ்டிங் கவுச் அனுபவம் ஏற்படவில்லை. அப்படி யாராவது கேட்டிருந்தால் அடித்திருப்பேன் அல்லது பிடித்திருந்தால் யோசித்திருப்பேன் என சிரித்துக்கொண்டே கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பேன் என்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன்னை புகழ் உள்பட பலரும் அம்மா அம்மா என்று அழைப்பதை ஆச்சரியமாக பார்ப்பதாக உணர்ச்சிப்பொங்க கூறியிருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.