பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை, மும்பையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சதீஷ் மன்ஷிண்டே ஆர்யனின் வழக்கை நடத்தி வந்த நிலையில், தற்போது தனது மகனை மீட்க ஒரு புதிய வழக்கறிஞரை நியமித்துள்ளார் ஷாருகான். இந்த வழக்கறிஞர்கள் சல்மான் கானையும் வெளியே கொண்டு வந்தவர்.
ஆர்யன் கானின் ஜாமீன் மனு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் 11 அன்று, இந்த விவகாரம் என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமித் தேசாய் நீதிமன்றத்தில் ஆரியனின் வழக்கை எதிர்த்துப் போராடி, அவரது ஜாமீன் மனுவை விசாரிக்க அடுத்த தேதியை கோரினார். இப்போது ஆர்யனின் ஜாமீன் நீதிமன்றத்தில் இன்று அதாவது அக்டோபர் 13 மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் ஆர்யன் கான் சிறையில் தனது நாட்களை எப்படி செலவிடுகிறார் என்பது குறித்தும், அவரது நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்தர் சாலை சிறையில் உள்ள ஆர்யன் கான் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ஆர்யன் கான் சிறையில் சரியாக சாப்பாடு உட்கொள்வது இல்லை, என்றும் சிறையில் இருக்கும் தண்ணீரை குடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மாறாக பிஸ்கட் மற்றும் தண்ணீர் மட்டுமே குடித்து தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும், அவருக்கு சிறையில் கொடுக்கப்படும் உணவுகள் பிடிப்பதில்லை என தெரியவந்துள்ளது.
அவர் சிறைக்கு வரும் போது 12 தண்ணீர் பாட்டில்களை வைத்திருந்தார், அதில் தற்போது மூன்று மட்டுமே இப்போது எஞ்சியுள்ளன.
மகனின் நிலையை எண்ணி ஷாருக்கான், தீவிர மன உளைச்சலில் சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் இருந்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த நண்பர்கள் கூறியுள்ள செய்திகள் ஏற்கனவே வைரலானது.
பல பாலிவுட் நடிகைகள் ஷாருக்கானின் இந்த சங்கடமான நேரத்தில் தோள் கொடுக்கும் விதமாக ஆறுதல் கூறி வரும் நிலையில், பழம்பெரும் நடிகர் சத்ருகன் சின்ஹா ஷாருக்கானை ஆதரிப்பதற்கு பதிலாக அவருக்கு எதிராக பேசி வருவது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
அதாவது ஆர்யன் கான் குறிவைக்கப்படுவதற்கு ஷாருக் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன், என்றும் ஷாருக்கான் தனது மதத்தின் அடிப்படையில் குறிவைக்கப்படுகிறாரா என்று சத்ருகன் சின்ஹா சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஷாருகான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.