இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார்.
இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
ஹோம்லி லுக்கில் வலம் வந்த நந்திதா இப்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி வந்தாலும், சில சமயங்களில் புடவை மட்டும் சல்வார் அழகில் ஜொலிக்கிறார்.
மேலும் முன்பு இருந்ததை விட உடல் எடையை ஏற்றி சும்மா கும்முனு மாறியுள்ளார். திரைப்பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை ஏற்றினாரா? என்பது தெரியவில்லை.
அழகு புன்னகையால்... ரசிகர்களை மயக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஸ்லிம் ஃபிட் அழகில் ரசிகர்களை வசீகரித்த இவர் உடல் எடையை ஏற்றி முன்பை விட அழகில் மெருகேறி உள்ளதாக சில ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
கடைசியாக இவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியான நிலையில், தற்போது இவரின் கைவசம் எம்.ஜி.ஆர் மகன் என்கிற ஒரு படம் மட்டுமே உள்ளது.
உடல் எடையை ஏற்றி, அழகில் மெருகேறி தேவதை போல் காட்சியளிக்கும் நந்திதாவுக்கு இனியாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.