'வலிமை' (Valimai) படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருடத்திற்கும் மேல் காத்திருந்த ரசிகர்களை, மென்மேலும் மகிழ்ச்சியாகும் விதமாக, அடுத்தடுத்து பல அப்டேட், மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே, தல அஜித் யங் லுக்கில் (Ajith) கலக்கியுள்ள BTS புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
சமீப காலமாக தன்னுடைய படங்களில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுவதை வழக்கமாக வைத்திருக்கும் அஜித், 'வலிமை' படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக செம்ம ஸ்டைலிஷான யங் லுக்கில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, ஏற்கனவே காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தில் ஐடி ஊழியராக இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
'வலிமை' திரைப்படம் பைக் ரேஸ் மற்றும் ஹிட்லரின் நாஜி படைகளின் மீதமிருக்கும் கொள்ளையர்கள் குறித்த கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் இப்படத்தில் குறைவிருக்காது என்று ஏற்கனவே வெளியான சில புகைப்படங்கள் மூலம் தெரிந்தது.
'வலிமை' திரைப்படத்தில், அஜித்துக்கு வில்லனாக நடித்திருப்பவர் இளம் நடிகர் கார்த்திகேயா... தற்போது அஜித்தும் இவரும், செம்ம ஸ்டைலிஷாக பைக்கில் அமர்ந்தபடி எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.