மகனை வெளியே கொண்டுவர துடித்த ஷாருக்கானுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..! ஆர்யன் கான் காவல் நீடிப்பு..!

First Published Oct 7, 2021, 8:13 PM IST

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானின் (Aryan Khan) காவல் இன்றுடன் முடிவடைவதால், ஷாருக்கான் மகன் (Shah Rukh Khan) இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், தற்போது இவரது வழக்கை விசாரணை செய்த பின்னர் ஆர்யன் கான் காவலை நீடித்து மும்பை நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், நடத்தப்பட்ட சோதனையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன், உட்பட 8 பேர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் கைது செய்யப்பட்டார். ஆர்யனும் மற்ற ஏழு பேரும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, விசாரணைக்காக என்சிபி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பலர் ஷாருக்கானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தும் வருகிறார்கள்.

ஆர்யன் கான் என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.  அவரை என்சிபி காவலில் அக்டோபர் 7 வரை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றுடன் இவரது காவல் முடிவடைய உள்ள நிலையில், இன்று ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே ஆர்யன் கான் காவல் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றம் ஆர்யன் கான் காவலை அக்டோபர் 11 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

எனவே நீதிமன்ற விசாரணை முடிந்த கையேடு, என்சிபி அதிகாரிகள் அவரை காவலில் அடைக்க அழைத்து சென்றனர். ஆர்யன் வழக்கில்  தற்போது பிரபல வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே ஆஜராகி உள்ளார். அவர் இதற்கு முன்பு 1998 கறுப்பு பன்றி வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்காகவும், 1993 ஆம் ஆண்டு பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் சிக்கிய போதும் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!