சமந்தா - டிசைனர் ப்ரீதாமுக்கு இடையே என்ன உறவு? உண்மையை போட்டுடைத்த மேக்கப் கலைஞர்..!

First Published | Oct 7, 2021, 6:08 PM IST

சமந்தா (Samantha) மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா சிங் (Sadhana Singh ) இதுகுறித்த விவாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமூக ஊடகங்களில் பதிலளித்தார்.

தென்னிந்திய சினிமாவில், இளம் நட்சத்திர ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த சமந்தா - நாக சைதன்யா, இருவரும் ஒன்றாக இணைந்து தங்களுடைய நான்காம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி, விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என... கடந்த வாரம் தங்களுடைய விவாகரத்து குறித்து தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்த சம்பவம் தற்போது வரை பரபரப்பாக தமிழ், தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வந்தாலும். இதுவரை சமந்தா - நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை.

Tap to resize

சுமார் 7 வருடங்களாக உருகி உருகி காதலித்து, மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்ட இவர்கள் எந்த ஒரு வலுவான காரணமும் இன்றி இப்படி ஒரு முடிவெடுக்க வாய்ப்பே இல்லை என்றாலும் , அப்படி  மனம் உடைந்து பிரிந்து செல்வதற்கு என்ன காரணம் என்று நிறைய யூகங்கள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் சமந்தாவின் ஸ்டைலிஸ்டாக பணியாற்றிய ப்ரீதம் ஜுகல்கர், உடல் சமந்தா காட்டிய நெருக்கம் தான் இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் சமந்தா மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா சிங் இதுகுறித்த விவாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமூக ஊடகங்களில் பதிலளித்தார்.

குறிப்பாக சமந்தாவுக்கும், ப்ரீதாமுக்கும் இடையிலான உறவு தவறாக சித்தரிக்கப்படுவதாக சாதனா சிங் கோபமாக பேசியுள்ளார். உண்மையில் ப்ரீதம் .. சமந்தாவை ஜிஜி என்றே அழைக்கிறார். ஜிஜி என்றால் சகோதரி என்று அர்த்தம்.

சமந்தாவும் ப்ரீதமும் அண்ணன்-  தங்கை போன்றவர்கள், தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்று சாதனா சிங் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், ப்ரீதமின் பதிவுகள் சில பரபரப்பாக பேசப்படுகின்றன. சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்துவிட்டதாக அறிவித்ததில் இருந்து, ப்ரீதம் சமூக வலைதளங்களில் பல கருத்துகளை கூறி அனைவரையும் குழப்பி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!