ஷாருக்கான், கௌரி கான் மற்றும் அவர்களது குடும்பத்தை வேதனைக்கு ஆளாகியுள்ளது ஆர்யன் கான் கைது. ஆர்யன் கானுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த மும்பை நீதிமன்றம், வரும் 7 ஆம் தேதி வரை ஆர்யன் கான் NCB கஸ்டடியில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஆர்யன் கானுக்கு வீட்டில் இருந்து உணவுகள் கொடுக்க வைக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்த NCB அதிகாரிகள், கௌரி கான் மகனை பார்க்க வந்த போது, ஆசையாக எடுத்து வந்த பர்கரை கூட கொடுக்க அனுமதிக்கவில்லை. மேலும், ஷாருகான் சிறப்பு அனுமதி பெற்று தன்னுடைய மகனை சந்தித்த போது ஆர்யன் அழுததாகவும் கூறப்பட்டது.
மறுபுறம், ஷாருக்கான் மகன் ஆர்யனின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே, ஆர்யனிடமிருந்து எதுவும் மீட்கப்படவில்லை என்று கூறியிருந்தார். "அவரிடம் எதுவும் கிடைக்கவில்லை. அங்கு இருந்ததன் அடிப்படையில் மட்டுமே அவர் கைது செய்யப்படுகிறார், ”என்று சதீஷ் மனேஷிண்டே கூறினார்.
ஷாருக்கான் மகன் கைது குறித்து அறிந்ததும், அட்லீயின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, தீபிகா படுகோனுடன் ஸ்பெயினுக்கு பயணம் செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் ரத்து செய்தார். மேலும் அஜய் தேவ்கனுடன் மும்பையில் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க இருந்ததையும் ரத்து செய்து விட்டார்.
தற்போது மகன் கைது விஷயத்தால் ஷாருக்கான் மோசமான மன நிலையில் இருப்பதாகவும், சரியான நேரத்தில் சாப்பிடவில்லை, போதுமான தூக்கம் இல்லை, மற்றும் அவரது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரை சந்திக்க யாரும் வரவேண்டாம் எனறும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்சிபியின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மற்றும் அவரது குழுவினரால் மும்பை இருந்து கோவா செல்லும் கப்பலில் திடீர் என நடத்தப்பட்ட சோதனையில், ஆர்யன் கான் உட்பட 7 பேர் போதைப்பொருள் பார்ட்டி கொண்டாடியதன் காரணமாக (NCB) ஆர்யன் கானை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடமும் ncb அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், எப்படியும் மகனை வெளியே அழைத்து வர வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வரும், ஷாருகானுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்னும் சில நாட்கள் கஸ்டடி நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.