பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி அமோகமாக துவங்கியது. கடந்த நான்கு சீசனை விட, போட்டியாளர்கள் தேர்வு இந்த முறை வித்தியாசமாகவே உள்ளது. அதே போல் எப்போதும் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.
வழக்கம் போல் இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் லக்சுரி டாஸ்காக, தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி பிரபலங்கள் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதன் படி ஏற்கனவே இசைவாணி, சின்ன பொண்ணு ஆகியோர் தங்களை பற்றி கூறிய நிலையில், நேற்று இமான் அண்ணாச்சி மற்றும் சுருதி ஆகியோர் தங்களை பற்றி கூறினர்.
இவர்கள் இருவரில் சுருதி கூறியது அனைத்து போட்டியாளர்கள் மட்டும் இன்றி, பார்க்கும் பார்வையாளர்கள் மனதையும் உருக்கும் விதமாக இருந்தது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தன்னுடைய அப்பாவிற்கும், அம்மாவின் தந்தை (தாத்தாவுக்கும்) ஒரே வயசு தான். அப்பாவின் முதல் மனைவி இறந்து விட்டதால், என் அம்மாவை அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அப்போது அம்மாவுக்கு 18 வயது. அப்பா வயதில் மிகவும் பெரியவர்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் தாரத்திற்கு மகள் மற்றும் மகன் இருந்தததால், நான் பிறப்பதற்கு முன்பே தனக்கு வாரிசு உள்ளது. இந்த குழந்தை உனக்கு வேண்டும் என்றால் வைத்துக்கொள் என கூறிவிட்டார். எனவே சிறிய வயதில் இருந்து அப்பா பாசம் என்றால் என்ன என்பதே தெரியாமல் தான் வளர்ந்தேன். அவர் என்னை ஒரு முறை கூட ஆசையாக தூக்கியது இல்லை. அம்மா இளமையானவர் என்பதால், சில சமயங்களில் என்னையும் அம்மாவையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்று விடுவார். ஒரு வாரம் கழுத்து வந்து தான் திறப்பார். இது போல் பல முறை நடந்துள்ளது.
தன்னுடைய 11 வயதில் அப்பா இறந்து விட்டார். அவர் இறப்புக்கு பின், சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். அம்மா தான் கஷ்டப்பட்டு என்னை வளர்த்து ஆளாக்கினார்.
தான் படித்த ஸ்கூலில் பாஸ்கெட் பால் விளையாட சென்றது தன்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாகவும், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சென்னை வந்து காலாஜ் படித்து, பின்னரே ஒரு ஐடி துறையில் பணியாற்ற துவங்கியதாக கூறினார்.
மேலும் அந்த வேலை பிடிக்காததால், வேலையை விட்டு விட்டு சென்னை வந்து வேலை தேடியபோது, மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றினேன். அப்போது எதிர்பாராத விதமாக, மாடலிங் துறையில் நுழைந்து அதுவே தன்னுடைய அடையாளமாக மாறிவிட்டதாக உருக்கமாக பேசியுள்ளார்.