4 வருடத்தில் விவாகரத்து..!! திருமண நாளில் வெள்ளை நிற உடையில் சமந்தா போட்ட பதிவு..!!

First Published | Oct 7, 2021, 11:02 AM IST

ஒருவேளை சமந்தா (Samantha) - நாக சைதன்யா (Naga chaitanya) தங்களுடைய பிரிவை அறிவிக்காமல் இருந்திருந்தால், இன்று அவர்களின் நான்காவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருப்பார்கள் (4th marriage anniversary).

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே சமந்தா பிரபல தெலுங்கு நடிகரும், நாகர்ஜூனாவின் (Nagarjuna) மகனுமான நாக சைதன்யாவை அக்டோபர் 6-7 தேதிகளில் கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

naga chaitanya samantha

இவர்களின் திருமணம் 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக கோவாவில் நடந்தது, பல வருடங்கள் இணைந்து வாழ்வார்கள் என கருதப்பட்ட இந்த தம்பதி துரதஷ்ட வசமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன், இருவருமே ஒரே நேரத்தில் பிரிவதாக அறிவித்தனர்.

Tap to resize

இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினர் நாக சைதன்யாவுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர், சமந்தாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

மேலும் சமந்தா இவர்களது விவாகரத்து குறித்து தெரிவித்த நாகர்ஜுனா, இது மிகவும் துரதிஷ்ட வசமானது என்றும், கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் தனிப்பட்டவை. அதில் எங்களால் தலையிட முடியாது. இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே எனக்கு மிகவும் பிரியமானவர்கள். எங்கள் குடும்பம் எப்போதும் சமந்தாவுக்கு ஆதரிக்கும். அவர் எப்போதும் எங்களுடைய பிரியமானவராக இருப்பார், அவர் எங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாதது.  கடவுள் இருவருக்கும் மனவலிமையை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறி இருந்தார்.

இருவருமே, இதுகுறித்து வாய் திறக்காத நிலையில், பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. சமந்தா டிசைனர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவது  தான் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டு பிரிவதற்கு காரணம் என்கிற தகவலும் பரவியது.

இந்நிலையில் தன்னுடைய திருமண நாளான இன்று, சமந்தா வெள்ளை நிற உடையில் போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி. இப்படி எனக்கு பிடித்த @ekaco நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை, நிலையான பேஷன் தினம், அக்டோபர் 8 ஆம் தேதி இரவு 7 மணிக்கு FDCI x Lakmé ஃபேஷன் வீக்கில் பாருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!