'பதான்' திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'ஜவான்'. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர், 'மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்' என்கிற ஹாலிவுட் படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
ஜவான் திரைப்படம் உணர்வுப்பூர்வமாக, இதயம் அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன், பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபரப்பான திரில் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக முற்றிலும் தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார் பாலிவுட் கிங் காங் ஷாருக்கான். இதுவரையிலும் இல்லாத புதுமையான தோற்றத்தில் ஷாருக்கான் தோன்றுவதால், ரசிகர்கள் மட்டுமல்லாது, ஊடகங்களும் ஜவான் ட்ரைலரை காண ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜவான் பன்முக திறமை மிக்க, நடிகர் ஷாருக்கானின் முழு திறமையையும், நடிப்பையும் வெள்ளித்திரையில் வெளிக்கொண்டுவரவுள்ளது.