ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் காரணமா? 25 ஆண்டுக்கு பிறகு உண்மைகளை உடைத்த பிரபல நடிகை.!

Published : Feb 12, 2026, 10:47 AM IST

நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி ஆகியோரின் பிரிவுக்கு பிரபல நடிகை தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நடிகை மனம் திறந்து உண்மைகளை பேசியிருக்கிறார்.

PREV
17
ராமராஜன் நளினி விவாகரத்து

1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். அன்றைய காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றோருக்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். திரையுலகின் உச்சத்தில் இருந்தபோது 1987-ல் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கை 2000 ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது.

27
ராமராஜன் - அபிதா காதல் வதந்தி

விவாகரத்துக்குப் பின்னர் நடிகர் ராமராஜன் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். அதிமுகவின் பிரச்சார அணியில் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகிறார். நளினி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராமராஜன் நளினி பிரிவிற்கு ‘சேது’ படத்தில் நடித்த நடிகை அபிதா தான் காரணம் என்கிற வதந்தி அப்போது கிளம்பியது. ராமராஜனும், அபிதாவும் இணைந்து ‘சீறிவரும் காளை’ என்கிற படத்தில் நடித்த போது இருவரும் நெருக்கமாக இருந்ததால்தான் நளினி ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

37
மனம் திறந்து பேசிய அபிதா

இந்த தகவல் குறித்து 25 ஆண்டுகளாக எந்த கருத்தையும் கூறாமல் இருந்து வந்த நடிகை அபிதா தற்போது இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். தனியார் யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்துள்ள அவர் கூறியதாவது, “தனக்கு ராமராஜனுடன் ‘சீறிவரும் காளை’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு ஹோம்லி கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். ராமராஜனுடன் ஷூட்டிங்கில் நடிப்பேன். ஷூட்டிங் முடிந்ததும் நான் மேக்கப் அறைக்கு சென்று விடுவேன். நான் நளினி மேடத்தை நேரில் பார்த்தது கூட கிடையாது. நளினி மேடம் ஒரு நாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததில்லை.

47
தினமும் அழுதேன் - அபிதா

நான் ராமராஜனுடன் அவ்வளவாக பேசியதும் கிடையாது. என்னுடைய ஷாட்டுகள் முடிந்த பிறகு நான் எனது அறைக்குச் சென்று விடுவேன். ஆனால் என்னால் தான் நளினியும், ராமராஜனும் பிரிந்து விட்டார்கள் என்று தேவையில்லாத வதந்தியை கிளப்பினார்கள். அது எனக்கு மிகவும் மெண்டல் டார்ச்சர் ஆக இருந்தது. சரி திருமணம் செய்து கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போதுதான் திருமதி செல்வம் வாய்ப்பு வந்தது. பின்னர் அந்தத் தொடரில் நடித்து வந்தேன். ஆனால் அந்த தகவல் பரவிய காலத்தில் நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டேன். தினமும் அழுதபடி இருப்பேன்.

57
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

ராமராஜன் என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகளை பரப்பினார்கள். அந்த வதந்தி உண்மையாக இருந்தால் அப்போதே எனக்கும் அவருக்கும் திருமணம் நடத்தி இருக்க வேண்டுமே? ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை? ஏனென்றால் அது ஒரு பொய்யான தகவல். நான் துன்பப்பட்ட வேலையில் எனது குடும்பத்தினர் மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் அந்த பாதிப்பில் இருந்து என்னால் முழுமையாக விடுபட முடிந்தது. ஆரம்பத்தில் மிகவும் அழுது கொண்டிருந்தேன். ஆனால் காலம் செல்ல செல்ல இப்படி பேசுவது அவர்களுக்கு ஒரு வேலை என்று விட்டுவிட்டேன்” என்று பேசி இருக்கிறார்.

67
ராமராஜன் நளினி பிரிவுக்கான வேறு காரணங்கள்

25 ஆண்டு காலமாக நிலவி வந்த வதந்திக்கு தற்போது அபிதா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதே சமயம் ராமராஜன் நளினி பிரிவுக்கு வேறு சில காரணங்களும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ராமராஜனுக்கு ஜாதகத்தின் மீது அதிக நம்பிக்கை இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக இருந்தால் ராமராஜன் உயிருக்கு ஆபத்து அல்லது அரசியல் அல்லது திரைப்பட வாழ்க்கைக்கு ஆபத்து எந்த ஜோசியர் கூறியதாகவும் அதனால் பிரிந்து விட்டதாகவும் தகவல் ஒன்று உலா வருகிறது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள நளினி, இருவருக்கும் பெரிய சண்டைகள் எதுவும் இல்லை. குடும்ப சூழல்கள் மற்றும் ராமராஜனின் பிடிவாதமான முடிவுகளே பிரிவுக்கு வழி வகுத்தன என்று கூறி இருக்கிறார்.

77
நளினி விளக்கம்

மேலும் நளினியின் சமீபத்திய பேட்டிகளில், “நானும் ராமராஜனும் இப்போதும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். என் பிள்ளைகளின் தந்தை என்கிற முறையில் அவர் மீது எனக்கு இப்போதும் மரியாதை இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். மேலும் பிள்ளைகளின் திருமணம், வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் என அனைத்தையும் நளினி மற்றும் ராமராஜன் இருவரும் இணைந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories