நிலாவை டார்ச்சர் பண்ணும் ராகவ்... வீட்டுக்கு சீல் வைக்க வந்த போலீஸ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

Published : Feb 12, 2026, 09:44 AM IST

அய்யனார் துணை சீரியலில் நிலாவை ஆபிஸில் வேண்டுமென்றே டார்ச்சர் செய்கிறார் ராகவ், இதனால் அதிரடி முடிவு எடுத்துள்ளார் நிலா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் நிலாவின் ரூமுக்குள் பாம்பு வந்ததை அடுத்து அவர் பதறிப்போகிறார். இதையடுத்து அனைவரும் சேர்ந்து பாம்பை விரட்டுவிடுகின்றனர். வீட்டில் ஆங்காங்கே சிதிலமடைந்திருப்பதால் தான் இப்படி பாம்பு வருகிறது, அதனால் வீட்டை சரிசெய்ய வேண்டும் என அனைவரும் முடிவு செய்கின்றனர். என்னென்ன வேலைகளெல்லாம் செய்யலாம் என ஒன்றாக பிளான் போடுகிறார்கள். நிலாவும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, வீட்டை சரி செய்வதற்கான வேலைகள் தொடங்குகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
வீட்டு வேலைகளை ஆரம்பிக்கும் சேரன்

வீட்டை ரிப்பேர் பண்ணுவதற்காக ஆட்களை வரவைத்து என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சேரன் சொல்கிறார். சிறிது நேரத்தில் சந்தாவும், அவருடைய அண்ணனும் அங்கு வருகிறார்கள். வீட்டில் வேலை இருப்பதாக சேரன் தான் அவர்களை அழைத்திருக்கிறார். சந்தாவை பார்த்த சோழன், வழக்கம்போல வம்பிழுக்க தொடங்குகிறார். நீ பாட்டுக்கு இங்க வந்து எங்க அண்ணனை வேலை செய்யவிடாம பண்ணீரக்கூடாது. இன்னைக்கே எல்லா வேலையையும் முடிக்கணும். அதனால கவனமா வேலை பார்க்கணும் என சோழன் சந்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதன்பின்னர் வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

35
நிலாவிடம் கறார் காட்டும் ராகவ்

மறுபுறம் ஆபிஸில், நிலா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது மூஞ்சி வீங்கியபடி ராகவ் ஆபிஸுக்கு வருகிறார். சோழன் தான் தன்னை அடித்து இந்த நிலைக்கு கொண்டுவந்தான் என்பதை சொல்லாம மூடி மறைக்கும் ராகவ், தான் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி சமாளிக்கிறார். நிலா மீது உள்ள கோபத்தில், அவரை டார்ச்சர் செய்கிறார் ராகவ். வேலையை கொடுத்த உடனே ஏன் முடிக்கல, என கேட்டு நிலாவை சத்தம்போடுகிறார். இதனால் கடுப்பாகும் நிலா, சீக்கிரமா வேற வேலையை பார்த்து போகணும்னு தன்னுடைய பிரெண்டு கிட்ட சொல்றாங்க. அதுமட்டுமின்றி வேறு எங்காவது வேலை இருந்தா சொல்லு என சொல்லி வைக்கிறார்.

45
சண்டை போட வந்த சேரனின் பெரியப்பா

வீட்டில் வேலை நடந்துகொண்டிருக்க, அப்போது சேரனின் பெரியப்பாவும், பெரியம்மாவும் அங்கு வருகிறார்கள். இந்த வீட்டுல எந்த வேலையும் செய்யக்கூடாதுனு சொல்லிருக்கோம்ல ஏன் செய்றீங்க என கேட்க, பெருசா எந்த வேலையும் செய்யல, சின்ன சின்ன வேலை தான் நடக்கிறது என சேரன் பொறுமையாக சொல்கிறார். ஆனால் நடேசன், அவர்களிடம் ஓவராக பேசுகிறார். இதனால் கடுப்பாகும் சேரனின் பெரியப்பா, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்து, கையோடு போலீசையும் அங்கு அழைத்து வருகிறார்கள். போலீசை பார்த்ததுமே அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

55
சீல் வைக்க போவதாக அறிவித்த போலீஸ்

போலீஸ் வந்தும் நடேசன் அடங்காம, அடிச்சுபுடுவேன், கொன்றுவேன்னு பயங்கரமா சத்தம்போடுகிறார். இதனால் கடுப்பாகும் போலீஸ், இதுக்கப்புறம் நீங்க இங்க இருக்கக்கூடாது. அதான் இந்த வீட்டு மேல கேஸ் போய்கிட்டு இருக்குல்ல. அந்த கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் யாருக்கு சாதகமா தீர்ப்பு வருதோ அவங்க இந்த வீட்டை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதுவரை இந்த வீட்டில் யாரும் இருக்க கூடாது. உங்க சண்டைக்கெல்லாம் போலீஸ் ஓயாம வந்து நின்னுகிட்டிருக்க மாட்டாங்க. அதனால் நாங்க இந்த வீட்டை பூட்டி சீல் வைக்கப் போறோம் என சொல்லும் போலீஸ், 10 நிமிஷம் டைம் தர்றோம் அதுக்குள்ள உங்க மூட்டை முடிச்செல்லாம் எடுத்துட்டு கிளம்புங்க என சொல்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories