Revathi Groom Brick Breaking Comedy Scene : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1120ஆவது எபிசோடில் காமெடி காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அது என்ன என்று பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் மற்றும் ரேவதிக்கு பஞ்சாயத்து மூலமாக சாமுண்டீஸ்வரி விவாகரத்து பெற்று கொடுத்தார். சந்திரகலாவின் யோசனையின்படி சட்டப்படி விவாகரத்து பெறவும், கார்த்திக்கை வீட்டை விட்டு துரத்தவும் கோர்ட்டை நாடினர். ஆனால், அங்கு கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக கார்த்திக் இப்போது மாமியார் வீட்டில் ரேவதிக்கு பக்க பலமாக இருக்கிறார்.
24
Revathi and Groom Comedy Karthigai Deepam
இது ஒரு புறம் இருந்தாலும், எப்படியும் கார்த்திக் மற்றும் ரேவதிக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து, ரேவதிக்கு 2ஆவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஐடியாவில் சாமுண்டீஸ்வரி இருந்தார். இதற்காக அமெரிக்கா மாப்பிள்ளையையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், அவரை பார்க்க ஒரு காமெடி பீஸ் மாதிரி தான் தெரிந்தது. சந்திரகலாவே அந்த அமெரிக்கா மாப்பிள்ளையை விமர்சனம் செய்தார்.
34
Karthigai Deepam Serial Comedy Scenes
ஆனால், சாமுண்டீஸ்வரி தான் அவர் தான் ரேவதிக்கான மாப்பிள்ளை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். ஏற்கனவே ரேவதியிடம் சரமாரியாக டோஸ் வாங்கிய நிலையில் கார்த்திக்கிடமும் வம்பு பண்ணி மாட்டிக்கிட்டார். இந்த நிலையில் தான் ரேவதியை இம்ப்ரஸ் செய்யும் விதமாக இன்றைய 1120ஆவது எபிசோடில் தான் ஒரு பலசாலி என்பதை நிரூபிக்க வீட்டின் மொட்டை மாடியில் செங்கற்கலை வைத்து உடற்பயிற்சி செய்தார்.
44
Karthigai Deepam Serial Today Episode
அவர் உடற்பயிற்சி செய்வதை பார்த்து ரேவதி உள்ளிட்டோர் சிரித்து மகிழ்ந்தனர். தன்னை அமெரிக்காவில் அப்படி கூப்பிடுவார்கள், இப்படி கூப்பிடுவார்கள் என்று அல்லி விட்டார். மேலும், 100 செங்கற்கலை உடைத்து கராத்தே பயிற்சி செய்வதாகவும் புரளி விட்டார். ஏற்கனவே காமெடி காட்சிக்கு மயில்வாகனம் இருக்கும் நிலையில் ஜீ தமிழில் இப்படியொரு காமெடி காட்சி எல்லாம் தேவையா என்று ரசிகர்கள் பலரும் விமர்சிக்க தொடங்கினர்.