சத்யாவின் பெற்றோர் பற்றி உண்மையை உடைத்த அர்ஜுன்! உறைந்து போன செல்வநாயகி.. அதிர்ச்சியில் சத்யா! | ஆடுகளம்

Published : Feb 11, 2026, 07:44 PM IST

Arjun Reveals Sathya Parents Truth to Selvanayagi in Aadukalam Serial : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Aadukalam Serial Today Episode

ஆடுகளம் சன் டிவியில் மதியம் 3 மணியளவில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அதிரடி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்றைய ப்ரோமோவில் அர்ஜுன் அசிஸ்டன்ட் பிரசிடெண்ட் நாமினேட் செய்திருந்தார். சஞ்சயின் சூழ்ச்சியால் நளன் அசிஸ்டன்ட் ப்ரெசிடெண்ட் பதவிக்கு nominate செய்ய சொல்லி வற்புறுத்தினான். அதன்படி நளனும் அப்பதிவிக்கு nominate செய்தார். அக்குழுவின் தலைவர் நளனையே தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

25
Aadukalam Serial Arjun and Sathya

சத்யா காலையில் சாமியரைக்குச் சென்று விளக்கேற்றினார் அப்போது விளக்கு ஏற்ற முடியவில்லை. தீபம் அணைந்து விட்டது அது ஒரு கெட்ட செயல் என்று நினைத்து வருத்தத்துடன் அடுத்த குச்சியை வைத்து ஏற்ற தீபம் ஏற்றியது இதில் மன கவலை அடைந்த சத்தியா என்ன நடக்கப்போகிறது என்று யோசித்துக் கொண்டே கடவுளிடம் வேண்டிக் கொண்டால் இன்னைக்கு என்னுடைய அர்ஜுன் இந்த நாமினேஷனில் ஜெயிக்க வேண்டும் அர்ஜுன் பழையபடி மாறனும் எனக்கு எப்பவும் போல அர்ஜுன் கிடைக்கணும் நானும் அவனும் சந்தோஷமா இருக்கணும் என்றெல்லாம் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார் சத்யா. 

35
Aadukalam Serial Sathya Parents Secret, ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோட்

அது ஒரு புறம் இருக்க மறுபுறம் செல்வநாயகி மற்றும் அவரது தம்பி அர்ஜுன் அபி அனைவரும் இந்த ரிசல்ட் காக காத்துக் கொண்டிருக்கின்றனர் டிவியில் செய்தியில் கூற காத்துக் கொண்டிருக்கின்றனர். செல்வநாயகி டிவியை on செய்ய செய்தி வருகிறது. பதட்டத்துடனும் எதிர்பார்ப்புடனும் செல்வநாயகி செய்தியை பார்க்கிறார். Will be a good news என்று சொல்ல அக்கா அர்ஜுன் தான் ஜெயிப்பா நீ பயப்படாதே என்று சொல்லி எதிர்பார்ப்புடன் டிவியை அனைவரும் பார்க்கின்றனர். சமீபத்தில் அகில இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்புக்கு நிர்வாகி மற்றும் நிர்வாகி உறுப்பினர்களுக்கு தேர்தல் சென்னையில் நடைபெற்றது. 

45
அர்ஜுன் - சத்யா ஆடுகளம் சீரியல், Arjun reveals Sathya's parents' truth to Selvanayagi

அந்த தொழில் கூட்டத்தின் தலைவராக எந்த போட்டியும் இன்றி நலன் கேட்டரிங் தலைவர் நலன் அசோசியேஷன் பிரசிடெண்ட்டாக வெற்றி பெற்றுள்ளார். என்று செய்தியில் கூறியுள்ளது இதனைக் கேட்டு செல்வநாயகி மிகவும் அதிர்ச்சி அடைகிறார். அதிர்ச்சி போர்க்களமாக மாறுகிறது. அப்போது சஞ்சய் சத்யா வீட்டுக்கு வருகிறான். அர்ஜுனை செல்வநாயகி கூப்பிடுகிறார் என்னம்மா ஆச்சு? என்ன பிரச்சனை என்று அர்ஜுன் கேட்க நளன் தான் இந்த அசோசியேஷன் பிரசிடெண்டில் ஜெயிச்சிருக்காரு என்று கோபத்துடன் செல்வநாயகி கூட அதிர்ச்சியில் இருக்கும் அர்ஜுன். எப்படி இவரு ஜெயிச்சாரு நான் தான் நாமினேஷன் பண்ணி இருக்கேன் அப்ப என்ன ஒரு மாப்பிள்ளையா கூட அவர பாக்கலையா என்றெல்லாம் கூற மிகவும் கோபம் அடைகிறார்.

55
சத்யாவின் பெற்றோர் பற்றி செல்வநாயகியிடம் சொன்ன அர்ஜுன்,

சஞ்சய் வீட்டிற்குள் வந்து செல்வநாயகி இடம் அர்ஜுனுடைய நாமினேஷன் பைல் ஆபீஸ் இருக்கு போகவில்லை நாமினேட் ஆகவில்லை என்ற செய்தியை கூற அதிர்ச்சியில் குடும்பமே நிற்கின்றது எப்படி போகவில்லை என்று கூறிக் கொண்டிருக்க சத்யா இதெல்லாம் உங்க வேலை தானா உங்க அப்பா உன்னைய விட்டு எழுந்தது மொத்தத்தையும் புடிக்கிறாரா என்று சத்யாமேல் கோபம் கொள்கிறார் அதற்கு அர்ஜுனும் சத்யா மேல் இருக்கும் கோபத்தில் ஆமாம் இதெல்லாம் அப்படித்தான் என்று எனக்கும் தோணுது என்று சொல்ல அர்ஜுன் அவர் உன்னுடைய மாமனார் என்று கூறுகிறார். கதை சூடு பிடிக்கிறது. அதற்கு அர்ஜுன் எங்க இன்னொரு தடவை சொல்லு என்று சொல்ல அவர் இந்த வீட்டு சம்பந்தி என்றும் என்னுடைய அப்பா என்றும் சொல்ல பயப்படுகிறார். யார் என்றும் சத்யாவின் பெற்றோர் யார் என்றும் சொல்லத் துடிக்கும் அர்ஜுன் ப்ரோமோ முடிவடைகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories