சமீப காலமாகவே, திரை உலகில் பலர் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும், சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை லதா ராவ் ஒரு வருடத்திற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினையால் பல பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்துள்ளார்.