தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா உள்ளிட்ட19 மொழிகளில், சுமார் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமானவர், இன்னிசை பாடகி வாணி ஜெயராம்.
27
இவர் பாடிய மேகமே மேகமே.. பால் நிலா தேடுதே, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் கத்திரிக்காய், மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவா போன்ற பாடல்கள், காலங்கள் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாணி ஜெயராம் தன்னுடைய கணவர் இறப்பிற்கு கணவர், வாழ்ந்த வீட்டில் தான் இருப்பேன் என பிள்ளைகள் எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும்... அவர்களுடன் செல்லாமல் தனியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வருகிறார்கள்.
47
மேலும் இவருக்கு சமையல் மற்றும் மேற்படி வேலைகள் செய்ய, மலர்கொடி என்பவர் கடந்த பத்து வருடங்களாக வாணி ஜெயராம் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இன்று வழக்கம்போல் தன்னுடைய பணிக்காக இன்று காலை 10:30 மணி அளவில் மலர்கொடி வந்து காரிங் பெல்லை அடித்துள்ளார். தொடர்ந்து 5 முறைக்கு மேல் பெல் அடித்தும் எடுக்காததால், போன் செய்து பார்த்துள்ளார். பலமுறை போன் செய்தும் எடுக்காததால், உடனடியாக இது குறித்து... அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
அவர்கள், வாணி ஜெயராமின் சகோதரருக்கு போன் செய்து விஷயத்தை கூறி உள்ளனர். அங்கு வந்த அவரின் சகோதரர், தன்னிடம் உள்ள சாவியை வைத்து கதைவை திருந்து பார்த்தபோது தான்... வாணி ஜெயராம் தன்னுடைய அறையில், கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
67
Vani jayaram
மேலும் மலர்க்கொடி, வாணி ஜெயராமின் உடல் நிலை குறித்து கூறியபோது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்ததாகவும், எந்த பிரச்னைகளுக்காகவும் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்ள வில்லை என தெரிவித்துள்ளார். அதே போல் போலீசாரும் வாணி ஜெயராமின் மரணம் இயற்க்கைக்கு மாறானது என, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாணி ஜெயராம் உடலை, போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே... மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.