பத்தல, பத்தல.. பாடலால் கிளம்பும் சர்ச்சை...கமல்ஹாசன் மீது காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் !!

First Published May 13, 2022, 1:04 PM IST

பத்தல பத்தல பாடலில் மத்திய அரசை விமர்சனம் செய்வது போல இடம்பெற்றுள்ள வாசகங்களை அகற்ற வேண்டும் என கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது..

vikram movie

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம்  2 மிகப் பெரிய பிரச்சனையை கமலுக்கு கொண்டு வந்தது. இந்த படத்தில் சாதிய ரீதியான குற்றச்சாட்டு எழுந்தது. அதை அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது கமலின் விக்ரம் படம் வெளியாக உள்ளது.

vikram movie

 இந்தப் படமும் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான விக்ரம் முதல் சிங்கிளில் இடம்பெற்றுள்ள வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் விதத்திலும், சாதி ரீதியான விமர்சனம் அதிகம் இருப்பதாக கூறி பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

vikram movie

கைது, மாஸ்டர்  உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில்  வில்லன்களாக நடித்து உள்ளனர்.

vikram movie

கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார், கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

vikram movie

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. பிரம்மாண்டமாக விக்ரம் படத்தை இந்த நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது.

vikram movie

அந்த வகையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் மே 15ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vikram movie

இதற்கிடையே இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிலே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் வெளியான 'பத்தல பத்தல' பாடல் குறித்து பிரபல நடிகை கஸ்தூரி வானதி அம்மையாரிடம் தேர்தலில் தோல்வியுற்ற காண்டை பாடல் வரிகளில் இறக்கி விட்டார் என்று கமெண்ட் செய்திருந்தார்.

Kamal Haasan

இந்நிலைகள் காவல் ஆணையரிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது கமலஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டது அந்த புகாரில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இணையதளம் மூலம் கமலஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை உடனடியாக நீக்காவிட்டால் ஜூன் மூன்றாம் தேதி வளரக்கூடிய விக்ரம் படத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு படத்தை தடை செய்யும் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!