டப்பிங் படங்களுக்காக தமிழ் படங்களை ஒதுக்குவதா?.... ஆக்‌ஷன் எடுக்கலேனா அவ்வளவுதான் - கொந்தளிக்கும் சீனு ராமசாமி

Ganesh A   | Asianet News
Published : Dec 28, 2021, 03:41 PM ISTUpdated : Dec 28, 2021, 03:43 PM IST

கேரளா, கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும் போது அவர்கள் முன்னுரிமை தருவது போல, தமிழ்நாட்டில் வெளியாகும்போது தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என சீனு ராமசாமி (Seenu Ramasamy) கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
17
டப்பிங் படங்களுக்காக தமிழ் படங்களை ஒதுக்குவதா?.... ஆக்‌ஷன் எடுக்கலேனா அவ்வளவுதான் - கொந்தளிக்கும் சீனு ராமசாமி

தமிழ்நாட்டில் சமீப காலமாக டப்பிங் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழிகளில் உருவாகும் படங்களை தமிழில் டப்பிங் செய்து அதனை முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக திரையிடப்பட்டு வருகிறது.

27

சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் தமிழகத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் தீபாவளிக்கு விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டதை விட அதிகமாம். அதேபோல் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் என்கிற ஆங்கிலப் படமும் அவ்வண்ணமே பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

37

அப்படங்களுடன் வெளியிட்டால் தங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது என சிறுபட்ஜெட் தமிழ் படங்கள் அச்சப்படும் நிலை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது. புஷ்பா, ஸ்பைடர்மேன் படங்களின் ஆதிக்கத்தால் தற்போது வெளியாகி இருக்கும் ராக்கி, ரைட்டர்ர், ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்கள் போதிய வரவேற்பு கிடைக்காமல் தவித்து வருகின்றன.

47

கன்னட சினிமாவும் இதுபோன்ற நெருக்கடியான நிலையை எதிர்கொண்ட போது, அங்குள்ள சினிமா சங்கங்கள் இணைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை வேற்றுமொழி சினிமாக்களுக்கு விதித்தன. அதன்படி வேற்று மொழிப் படங்கள் வெளியாகி 2 வாரங்கள் கழித்தே கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்பதும் அதில் ஒன்று. அதுபோன்ற நடவடிக்கையை தமிழ் சினிமா சங்கங்களும் எடுக்க வேண்டும் என இயக்குனர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

57

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கேரளா, கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும் போது அவர்கள் முன்னுரிமை தருவது போல, தமிழ்நாட்டில் வெளியாகும்போது தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மாற்றுமொழி டப்பிங், ஆங்கிலப் படங்கள் தனியாக திரையிட கால அட்டவணையை தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்க வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

67

ஒரே நேரத்துல மூனு டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள் அதிக விளம்பரத்தோட வந்தா இங்க இருக்கிற 'ரைட்டர்' எப்படி தன்னோட வீட்ல ஆனந்தமா விளையாட முடியும்? சிலந்தி கூடு கட்டிராதா? எல்லாத்தையும் ஒரே நேரத்துல விடாம ஒவ்வொன்னா கூட விடுங்க இது பத்தி யோசிக்கலமா? என சீனி ராமசாமி கேள்வி எழுப்பினார்.

77

இதற்கு பதிலளித்த சேரன், “அதற்கு தமிழர்கள் முன்னுரிமை பேசப்பட வேண்டும்.. அதை நம் அரசாங்கம் முன்னின்று செயல்பாட்டை உறுதிப்படுத்த வலியுறுத்த வேண்டும்.. தமிழ்ப்படங்களுக்கு சிறுமுதலீட்டு படங்களுக்கு காட்சிகள் பாகுபாடு முறைப்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளதோடு, அந்த டுவிட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதியையும் டேக் செய்துள்ளார்.

click me!

Recommended Stories