நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் அஜித் - எச்.வினோத் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது.
29
valimai
இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தாயாராகி வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
39
valimai
இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ளதால், படத்தை புரமோட் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
49
valimai
வலிமை படத்தின் கதை வேறு ஒரு ஹீரோவுக்காக எழுதியது என்று இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
59
valimai
முதலில் இதில் போலீஸ் கதாபாத்திரம் இல்லாமல் இருந்ததாகவும், அஜித் படத்தில் இணைந்தவுடன் தான் சிறிய மாற்றம் செய்து போலீஸ் கதாபாத்திரத்தை சேர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
69
valimai
இருப்பினும் வலிமை படத்தின் கதை எந்த ஹீரோவுக்காக எழுதப்பட்டது என்பது குறித்த தகவலை இயக்குனர் எச்.வினோத் வெளியிடவில்லை.
79
valimai
மேலும் வலிமை படத்துக்கு பின் அஜித்தின் 61-வது படத்தை இயக்க உள்ள எச்.வினோத், அது முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
89
valimai
அஜித் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம், இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு வெளியாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.
99
valimai
மேலும் படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே உள்ளதால்... அனல் பறக்கும் புரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் படக்குழுவினர். மேலும் அஜித்தின் வலிமை படத்திலிருந்து அடுத்த வாரம் ட்ரைலர் வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்தி உலா வருகிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து புதிய ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது.