எச்.வினோத் (H vinoth) இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை (Valimai) திரைப்படம், வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இயக்குனர்கள் பார்த்திபன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் எச்.வினோத். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
27
வித்தியாசமான கதையம்சத்தோடு உருவாகி இருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார்.
37
இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. நேர்கொண்ட பார்வை ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி வாகை சூடினார் வினோத்.
47
இப்படத்தில் வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன அஜித், தனது அடுத்த படமான ‘வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.
57
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
67
அந்த வகையில் சமீபத்திய பேட்டியில், அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கிய நீங்கள் விஜய் படத்தை எப்போது இயக்குவீர்கள் என எச்.வினோத்திடம் கேட்கப்பட்டது.
77
இதற்கு அவர் கூறியதாவது : “விஜய் எனக்கு கதை சொல்ல மூன்று சான்ஸ் கொடுத்தார், ஆனால் நான்தான் சொதப்பி விட்டேன். இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால் கதையை நன்றாக தயார் செய்து கொண்டு சென்று அவரிடம் சொல்வேன்” என கூறியுள்ளார்.