samuthirakani in RRR : RRR-ல் சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 28, 2021, 12:28 PM ISTUpdated : Dec 28, 2021, 01:42 PM IST

samuthirakani in RRR : ராஜமௌலியின் மகன் S.S.Karthikeya தயாரிக்கவுள்ள படத்திலும் சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். இதிலும் முதலில் சம்பளம் வேண்டாம் என கூற மறுத்த S.S.Karthikeya அவருக்கு ரூ.1.5 கோடியை சம்பளமாக பிக்ஸ் செய்துள்ளாராம்..

PREV
112
samuthirakani in RRR : RRR-ல் சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
samuthirakani

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிக்கனியை ருசித்தவர்.

212
samuthirakani

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிக்கனியை ருசித்தவர்.

312
samuthirakani

இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி, 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைத்தேன் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கே, சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு கிடைத்தது.

412
samuthirakani

இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான, 'நாடோடிகள்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

512
samuthirakani

அரசி, இதோ பூபாலன் போன்ற சில சீரியல்களை இயக்கி உள்ளது மட்டும் இன்றி, ஜன்னல், மர்மதேசம் , 7 சி போன்ற சீரியல்களில் நடித்தும் உள்ளார்.

612
samuthirakani

மேலும் இவர் நடிப்பில் வெளியான அப்பா, சாட்டை போன்ற படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது கிடைத்தது.

712
samuthirakani

இப்படி பல்வேறு, பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருந்தாலும் எப்போதும் மிகவும் எளிமையாகவே அனைவரிடத்திலும் பழகும் குணம் கொண்டவர் சமுத்திரக்கனி.

812
samuthirakani

சமுத்திரக்கனி தமிழில் 2003-ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதையாசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். இவர் இத்திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதையாசிரியருக்கான விருதினையும் பெற்றுள்ளார்.

912
samuthirakani

ரைட்டர் திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சமுத்திரக்கனி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய மொழிகள் பலவற்றிலும் குணசித்தர நடிகர், மற்றும் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில் ராஜமௌலி யத்தில் உருவாகியுள்ள  RRR படத்திலும் இவரை ஒப்பந்தம் செய்துள்ளார் ராஜமவுலி.

1012
samuthirakani

RRR படத்திற்காக சமுத்திரக்கனியை ஐதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புக்கு வர கூறியுள்ளார். அதற்காக விமான டிக்கெட் மற்றும் ரூம் போடுவதற்காக சமுத்திரக்கனியை தயாரிப்பு நிறுவனம் சார்பாக அழைத்துள்ளனர். அப்போது சமுத்திரக்கனி தான் ஏற்கனவே விமான டிக்கெட் மற்றும் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை சொந்த செலவில் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

1112
samuthirakani

பின்னர் படத்தில் நடிப்பதற்கான சம்பளம் குறித்து சமுத்திரக்கனியிடம் ராஜமவுலி பேசுகையில் தனக்கு எந்த சம்பளமும் வேண்டாம் உங்கள் படத்தில் நடிப்பதே பாக்கியம் என சமுத்திரக்கனி குறை வாயடைத்து போனாராம் ராஜமவுலி. பின்னர் அவருக்கு ரூ.2 சம்பளம் என கூறியுள்ளனர். 2 என்றால் இரண்டும் லட்சமாக இருக்கலாம் என் சமுத்திரக்கனி கருத்தியுள்ளார். 

1212
samuthirakani

படப்பிடிப்பு இறுதியில் சமுத்திரக்கனிக்கு ரூ.2 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இவர் சம்பளத்தை தவறாக எழுதிவிட்டதாக கூறி மீண்டும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். இதையறிந்த தெலுங்கு திரையுலகம் சமுத்திரக்கனிக்கு பட வாய்ப்புகளை அல்லி கொடுத்து வருகிறது. அதோடு ராஜமௌலியின் மகன் S.S.Karthikeya தயாரிக்கவுள்ள படத்திலும் சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். இதிலும் முதலில் சம்பளம் வேண்டாம் என கூற மறுத்த S.S.Karthikeya அவருக்கு ரூ.1.5 கோடியை சம்பளமாக பிக்ஸ் செய்துள்ளாராம்..

Read more Photos on
click me!

Recommended Stories