வருங்கால மனைவி கொடுத்து வைத்தவர்!! சிம்பு என்ன சொல்லி இருக்கார் பாருங்க..

First Published | Dec 28, 2021, 10:10 AM IST

மாநாடு வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சிம்பு, தனக்கு வரும் மனைவியிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்...

simbu

சிம்பு படம் என்றாலே பில்டப் சாங், லிப்லாக் சீன், அரைகுறை ஆடைகளுடன் நடன மங்கைகள், படப்பிடிப்பிற்கு தாமதமாக வருதல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இந்த மோசமான கருத்துக்களுக்கு மாநாடு வெற்றியின் மூலம்  சிம்பு முடிவு கட்டியுள்ளார்

simbu

சிம்புவின்  கால்ஷீட் பிரச்சனையால் இரண்டு வருட காலமாக மாநாடு படம் உருவாவதில் பல தாமதம் ஏற்பட்டது. இதனால் கடுப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக மாநாடு முழு உருவம் பெற்றது.

Tap to resize

simbu

இருத்தும் வெளியாவதில் பல பிரச்சனைகளை சந்தித்த இந்த படம் இறுதியாக கடந்த 25-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்காக சிம்பு 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அதோடு முறையாக படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

simbu

ஆனால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு உண்மையில் வேற லெவலில் இருந்தவர். டிசிப்ளின்,டெடிக்கேஷன் என தன்னை முழுவதுமாக திரைத்துறைக்கு அர்பணித்திருந்தார் சிறுவயது சிம்பு.

simbu

திரையில் நாயகனாக அறிமுகமான சிறுது காலத்திலேயே இயக்குனர் அவதாரம் எடுத்த சிம்பு  மன்மதன்,வல்லவன், வாலிபன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

simbu

பின்னர் தொடர் வெற்றிகளை ருசித்து வந்த சிம்புவின் முந்தைய படங்கள் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. இதற்கிடையே பீப் பாடல் சர்ச்சை, தயாரிப்பளாருடன் பிரச்சனை ஏற்பட்டதால் சிம்பு படத்திற்கு தடா உள்ளிட்ட பல இடையூறுகளை சந்தித்தார் சிம்பு.

simbu

இதையடுத்து ஒரு முடிவுக்கு வந்த சிம்பு திடீரென அதிகரித்த 110 கிலோ எடையை 4 மாத இடைவெளியில் கடின முயற்சியுடன் எடை குறைப்பு செய்து மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பினார்.

simbu

இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள சிம்பு; உடை எடையை குறைக்க பல இரவுகள் பசியுடன் உறங்கியதாகவும், சிறு வயதில் திரையில் மட்டும் முழு கவனம் செலுத்தி வந்த தான் பார்ட்டிக்கு சென்றதில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் சில நண்பர்கள் சேர்க்கையால் மனம்மாறி எதற்கெடுத்தாலும் பார்ட்டி செய்து பல தருணங்களை இழந்து விட்டதாக கூறியுள்ளார். 

simbu

இனி தனது வாழ்வில் பார்ட்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று கூறியுள்ள சிம்பு கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல கதைகளை எழுதி வைத்துள்ளதாகவும் விரைவில் பட இயக்குனராக தனது முந்தைய பரிமாணத்திற்கு மாற உள்ளதாக தெரிவித்துள்ளார். 

simbu

பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, 10 தல, கொரானா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

simbu

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இனி வருங்கால மனைவியிடம் இப்படித்தான் இருப்பேன் என கூறியுள்ளார். அதாவது என்னை நம்பி வருபவளுக்கு ஆறுதலாக, துணையாக, உதவியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!