Published : Dec 28, 2021, 08:55 AM ISTUpdated : Dec 28, 2021, 08:58 AM IST
RRR PreRelease Event : சென்னையில் நடைபெற்ற ஆர் ஆர் ஆர் ப்ரோமோஷன் விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு வைரலாகி வருகிறது. அதோடு ட்ரம்ஸ் வாசிப்பவரிடம் இவர் நடந்து கொண்ட விதமும் தற்போது பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
211
sivakrthikeyan in rrr promotion
பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
311
sivakrthikeyan in rrr promotion
ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
411
sivakrthikeyan in rrr promotion
இந்நிலையில், நேற்று சென்னையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இதில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதேபோல் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயனும், உதயநிதியும் கலந்துகொண்டனர்.
511
sivakrthikeyan in rrr promotion
சிவகார்த்திகேயன் மேடையில் பேசுகையில், நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய ஃபேன், மகாதீரா படம் பார்த்ததில் இருந்து. அதற்கு பிறகு நான் ஈ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது என்று கூறினார்.
611
sivakrthikeyan in rrr promotion
இவ்வளவு பெரிய படங்களை, சாதனைகளை செய்து விட்டு அமைதியாக இருப்பது மிகவும் கஷ்டம். அதை ராஜமௌலி தவம் போல செய்கிறார்கள் என நினைக்கிறேன் என கூறினார் சிவகார்த்திகேயன்.
711
sivakrthikeyan in rrr promotion
இங்கு நமக்கெல்லாம் ஒரு படம் ஓடிட்டாலே, ஹிட் கொடுத்துட்டோம்ல என நினைக்கும் போது, உலகம் முழுவதும் ஒரு படத்தை பார்க்க வைத்து விட்டு, அடுத்து என்ன பெரிசா பண்ணலாம்ன்னு யோசிக்கிறது ரொம்ப ஊக்குவிப்பதாக உள்ளது என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
811
sivakrthikeyan in rrr promotion
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நம்ம கனவை தாண்டியும் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் மிகப் பெரிய இன்ஸ்ப்ரேஷன். உங்களை பார்க்க வேண்டும் என்று தான் ஆவலாக இருந்தேன். இன்று பார்த்து விட்டேன். என ராஜமௌலி குறித்து வியந்து பேசினார் சிவகார்த்திகேயன்.
911
sivakrthikeyan in rrr promotion
இது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் படமாக இருக்க போகிறது. ஆர்ஆர்ஆர் படம் இந்திய சினிமாவின் பெருமையாக உள்ளது. இந்த படம் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். டிரைலரே மிரட்டலாக ஒரு படத்தை பார்ப்பது போல் ஷாட் ஷாட்டாக பார்க்க வைக்கிறது. இன்னும் படம் எப்படி இருக்குமோ என பார்க்க மிக ஆர்வமாக உள்ளேன் என்றார்.
1011
sivakrthikeyan in rrr promotion
நான் கண்டிப்பாக முதல் நாள் முதல் ஷோ பார்க்க போறேன். நீங்களும் அனைவரும் கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள். கொரோனாவால் சினிமா உலகமும் தியேட்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 2022 ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் வந்து மிகப் பெரிய வசூலை கொடுக்க போகிறது. அதைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை வரப் போகிறது. இந்த படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வந்தால் அதற்கு பிறகு வரும் எங்களின் படங்களும் ஓடும் என்றார்.
1111
sivakrthikeyan in rrr promotion
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் விஜய் நன்றி தெரிவித்தனர். அப்போது ட்ரம்ஸ் வாசித்தவரின் பெயரை சொல்ல மறந்து விட்டனர். இதை கவனித்த சிவகார்த்திகேயன், மேடைக்கு கீழே இருந்த படி சைகையிலேயே ட்ரம்ஸ் வாசிப்பவரின் பெயரை சொல்லும்படி கூறினார். சிவகார்த்திகேயனின் இந்த நல்ல மனசை சோஷியல் மீடியாவில் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.