
தமிழ் சினிமாவில், இயக்குனர் எஸ் ஏ சி-யின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தளபதி விஜய். சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொண்டது தன்னுடைய திறமை மூலம் தான்.
நடிப்பை தொடர்ந்து தற்போது தளபதி விஜய், அரசியலிலும் கால் பதித்துள்ளார். கடந்தாண்டு தன்னுடைய அரசியல் கட்சி குறித்தும், அதன் கொடி மற்றும் பாடல் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வெளியிட்டார். அதே போல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, சட்டமன்றத் தேர்தலுக்கும் தீவிரமாக தயாராகி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த, இவருடைய மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
விஜய் ரசிகர்கள் என்னை மிரட்டுறாங்க...ஜன நாயகன் எடிட்டருக்கு விஜய் சொன்ன கூல் பதில்
புதிதாக கட்சி தொடங்கிய தளபதி விஜய்க்கு கிடைத்த வரவேற்பையும் - மக்கள் கூட்டத்தையும் கண்டு தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியினர் மற்றும் முன்பு தமிழகத்தை ஆண்ட கட்சியினர் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
தளபதி விஜய் கூடிய விரைவில் முழுக்க முழுக்க அரசியலில் இறங்கி உள்ளதால், தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 'ஜனநாயகன்' திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஏற்கனவே பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிக்க, வில்லனாக கங்குவா படத்தில் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமான பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.
விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இந்த வாரிசு நடிகையா?... வைரலாகும் செம ஹாட் தகவல்
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முடிவுக்கு வரும் என கூறப்படும் நிலையில், இந்த படத்தை ஆகஸ்ட் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.
இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் பாபி தியோல், தளபதி விஜய் குறித்து பேசி உள்ள தகவல் வைரலாகி வருகிறது. (What kind of person is Thalapathy Vijay?) ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற பாபி தியோல், விஜய் பற்றி கூறும் போது, "விஜய் ஸ்வீட் ஹார்ட்டாக இருக்கிறார் என்றும், அவர் மிகவும் எளிமையாக மற்றும் தன்னடக்கம் கொண்ட மனிதர் என தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் புதிதான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புவதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்புக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் இளைய மகனான பாபி தியோல் பர்சாத் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், 'அனிமல்' திரைப்படம் தான் இவரை தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைய வைத்தது. இதை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.