அடேங்கப்பா... மார்ச் 14ந் தேதி மட்டும் 10 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறதா? முழு லிஸ்ட் இதோ

Published : Mar 10, 2025, 10:27 AM IST

மார்ச் மாதம் 14ந் தேதி ரியோ நடித்துள்ள ஸ்வீட் ஹார்ட் முதல் வைபவ்வின் பெருசு வரை மொத்தம் 10 படங்கள் ரிலீஸ் ஆகின்றன, அதன் பட்டியலை பார்க்கலாம்.

PREV
111
அடேங்கப்பா... மார்ச் 14ந் தேதி மட்டும் 10 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறதா? முழு லிஸ்ட் இதோ

Theatre release Tamil Movies on March 14 : மார்ச் மாதம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த மாதம் முதல் வாரத்தில் ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் உள்பட சில படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், இரண்டாவது வாரம்... அதாவது மார்ச் 14ந் தேதி 10 தமிழ் படங்கள் திரைக்கு வர உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

211
ஸ்வீட் ஹார்ட்

ஜோ படத்தின் வெற்றிக்கு பின் ரியோ ஹீரோவாக நடித்துள்ள படம் ஸ்வீட் ஹார்ட். இப்படத்தை ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கி உள்ளார். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளது மட்டுமின்றி இப்படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். காதல் கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற மார்ச் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

311
பெருசு

இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள படம் பெருசு. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தில் பால சரவணன், சுனில், ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அருண் ராஜ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படமும் மார்ச் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது.

411
ராபர்

எஸ்.எம்.பாண்டி இயக்கத்தில் மெட்ரோ சத்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ராபர். இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் டேனி போப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜோகன் இசையமைத்துள்ள இப்படத்தை கவிதா தயாரித்துள்ளார். இப்படமும் வருகிற மார்ச் 14ந் தேதி திரை காண உள்ளது.

511
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். இப்படத்தை கே ரங்கராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக பூஜிதா நடித்துள்ளார். இப்படத்தை வி மாணிக்கம் தயாரித்துள்ளார். நளினி, டெல்லி கணேஷ், சாம்ஸ், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் மார்ச் 14 அன்று திரைக்கு வருகிறது.

611
வருணன்

ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேங்ஸ்டர் படம் தான் வருணன். இப்படத்தில் சன் டிவி சீரியல் பிரபலங்களான எதிர்நீச்சல் தொடர் ஹரிப்பிரியா, மருமகள் தொடரின் நாயகி கேப்ரியல்லா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படமும் மார்ச் 14 அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... 10 ஆண்டுகளில் அஜித் படங்களின் வசூல்; மொத்தமே இவ்வளவுதானா? அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

711
மாடன் கொடை விழா

தங்கப்பாண்டி இயக்கத்தில் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது மாடன் கொடை விழா திரைப்படம். இப்படத்தை சிவப்பிரகாசம் உதயசூரியன் தயாரித்து உள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் மார்ச் 14ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

811
குற்றம் குறை

விஜய் திருமூலம் மற்றும் சதீஷ் கே சேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் குற்றம் குறை. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற மார்ச் 14ந் தேதி திரைக்கு வருகிறது.

911
டெக்ஸ்டர்

சூரியன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் டெக்ஸ்டர். இப்படத்தை ராம் எண்டர்டெயினர்ஸ் பிரகாஷ்.எஸ்.வி தயாரித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தில் ராஜு கோவிந்த் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படமும் மார்ச் 14 அன்று ரிலீஸ் ஆகிறது.

1011
ரஜினி முருகன் (ரீ-ரிலீஸ்)

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான ரஜினிமுருகன் வருகிற மார்ச் 14ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருந்தார்.

1111
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (ரீ-ரிலீஸ்)

ரவி மோகன் நடித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்த படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகை நதியா, அசின், நடிகர் விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படமும் வருகிற மார்ச் 14ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... மார்ச் 14ந் தேதி போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் படங்கள்

click me!

Recommended Stories