Lokesh Kanagaraj Movie Shooting Stopped : மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக 5 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
24
Benz Movie
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படம் இயக்குவது மட்டுமின்றி பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஃபைட் கிளப் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ், அடுத்ததாக பென்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஒரு எல்.சி.யு படமாகும். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாடகர்கள் திப்பு, ஹரிணி ஜோடியின் மகனான சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
பென்ஸ் திரைப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியிருக்க, அப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, கார்த்தியின் சுல்தான் போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது திடீரென அப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் நிதிப்பிரச்சனையால் இப்படம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
44
Benz Movie Shooting Stopped
பென்ஸ் படத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை காட்டிலும் அதிக அளவில் செலவாகி வருகிறாதாம். இதனால் வேறு வழியின்றி படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளார்களாம். பென்ஸ் பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால் ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா 4 பட வேலைகளில் பிசியாக இருக்கிறாராம். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படம் பணப்பிரச்சனையால் நிறுத்தப்பட்டுள்ள விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.