Ajith Box Office Report : தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். அதே நேரத்தில் அஜித் சினிமா கரியரில் மட்டும் கவனம் செலுத்துபவர் அல்ல. மாறாக ரேசிங், பயணம் என அவருக்கு விருப்பமான பல விஷயங்கள் உள்ளன. அதற்காக அவர் தீவிரமாக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார். சமீபகாலமாக அஜித்குமாருக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 11 வருடங்களில் அஜித் குமார் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
25
Ajith
2014ல் வெளியான வீரம் முதல் கடைசியாக வெளியான விடாமுயற்சி வரை அஜித் குமார் படங்கள் மொத்தம் 1167 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது இந்த காலகட்டத்தில் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ஆரோக்கியத்தில் அஜித் குமார் பெரும் பங்கு வகித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவரது சராசரி பாக்ஸ் ஆபிஸ் 130 கோடி. இதில் குறைந்த வசூல் வீரம் (74.75 கோடி), அதிக வசூல் துணிவு (194.5 கோடி). இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் இதுவரை அஜித்குமாரால் 200 கோடி கிளப்பில் இணைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம், தமிழ்நாட்டிற்கு வெளியே அவரது படங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வசூல் செய்வதே காரணம். மற்ற முன்னணி நடிகர்களான விஜய், ரஜினிகாந்த் போன்றோர் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிக வசூல் செய்கிறார்கள். ஆனால் அஜித் படங்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே அதிக வசூல் கிடைக்கும், விஜய், அஜித், சூர்யா ஆகியோரோடு ஒப்பிடுகையில் அஜித்துக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கம்மியான அளவிலான ரசிகர்களே உள்ளனர். இதனால் அஜித் படங்கள் அங்கு பெரியளவில் எடுபடாது.
45
Ajith Kumar Movies Collection
இதுவரை அஜித் நடிப்பில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள் என்றால் அது வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு மற்றும் விடாமுயற்சி ஆகிய 6 படங்கள் தான். அவற்றில் விஸ்வாசம் (180 கோடி), வலிமை (152 கோடி), துணிவு (194.5 கோடி) ஆகிய படங்கள் மட்டுமே 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. மற்றவை அதற்கும் குறைவான வசூலையே எட்டி இருப்பதாக சினிடிராக் தளத்தின் பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
55
Ajith 10 Years Box Office
அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி இந்த டிரெண்டை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். இதனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.