Sivakarthikeyan and Ravi Mohan Movie Re Release : தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படம் வருகிற மார்ச் 14-ந் தேதி ரவி மோகனின் கிளாசிக் ஹிட் படத்தோடு போட்டிபோட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2016-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ரஜினிமுருகன். அப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருந்தார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்தார். சூரி, சமுத்திரக்கனி, தீபா ராமானுஜம், மனோபாலா, நமோ நாராயணா, வேல ராமமூர்த்தி, சுப்ரமணியபுரம் ராஜா, மீனா, பாவன் அனேஜா, நாடோடிகள் கோபால், கஜராஜ், தர்ஷன் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான் வருகிற மார்ச் 14ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.