நடிச்சது ஒரே ஒரு படம்; ஆனால் அதற்கு 3 தேசிய விருதுகள்! ஜெமினி கணேசனின் யூனிக் சாதனை

Published : Mar 09, 2025, 01:18 PM IST

நடிகர் ஜெமினி கணேசனின் மனைவி சாவித்ரி தமிழ் திரையுலகில் கோலோச்சியதை போல் தெலுங்கு சினிமாவிலும் ஒரு நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்தார். 

PREV
14
நடிச்சது ஒரே ஒரு படம்; ஆனால் அதற்கு 3 தேசிய விருதுகள்! ஜெமினி கணேசனின் யூனிக் சாதனை

Gemini Ganesan acted only one telugu Movie : தெலுங்கில் தமிழ் படங்களுக்கு அதிக மவுசு உண்டு. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் காலத்திலிருந்து தான் தெலுங்கில் தமிழ் படங்களை டப்பிங் செய்யும் போக்கு அதிகரித்தது. ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற மூத்த தமிழ் ஹீரோக்களின் படங்கள் பெரியளவில் தெலுங்கில் டப் செய்யப்படவில்லை. இதனால் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஜெமினி கணேசன் போன்ற புகழ்பெற்ற நடிகர்களின் நடிப்புத் திறமையை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

24
Savitri, Gemini Ganesan

ஜெமினி கணேசன், சாவித்ரியை மணந்த பிறகுதான் அவருக்குப் பிரச்சனைகள் தொடங்கின என்று ஒரு வதந்தி உள்ளது. சாவித்ரி தெலுங்கு திரையுலகில் உச்சத்தில் இருந்த போது, ஜெமினி கணேசன் ஒரு தெலுங்குப் படத்தில் கூட நடிக்கவில்லை. சாவித்ரி இறந்த பிறகு தான் ஜெமினி கணேசன் ஒரே ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். அந்தப் படம் தான் ருத்ரவீனா. இது மெகாஸ்டார் சிரஞ்சீவியின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகும். 

இதையும் படியுங்கள்... நடிப்பால் அசரடித்த சாவித்ரி; இயக்குனர் அவதாரம் எடுத்த ஒரே படம் எது தெரியுமா?

34
Rudraveena

ருத்ரவீனா படத்தில், ஜெமினி கணேசன், சிரஞ்சீவியின் தந்தையாக, ஒரு பிராமணராக, அடக்கமான சுபாவத்துடன் தோன்றினார். இப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் ஜெமினி கணேசன் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். கே பாலசந்தர் இயக்க, இளையராஜா இசையமைத்த இப்படத்தை 1998-ம் ஆண்டு சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு தயாரித்திருந்தார். இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வென்று அசத்தியது. சிறந்த திரைப்பட விருதை வென்றதோடு, இந்தப் படம் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் சிறந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கான தேசிய விருதுகளையும் வென்றது. 

44
Chiranjeevi, Gemini Ganesan

இதேபோல், இப்படம் நான்கு நந்தி விருதுகளையும் வென்றது. சிறந்த வசனகர்த்தா, சிறந்த ஆடியோகிராஃபர், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறப்பு ஜூரி விருது பிரிவுகளில் நந்தி விருதுகளை வென்றது ருத்ரவீனா. ஜெமினி கணேசன் நடித்த ஒரே ஒரு தெலுங்கு படம் இதுதான். ஆனால் இப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத படமாகவே மாறியது. ஜெமினி கணேசன் உடன் நடித்த சிரஞ்சீவி, சாவித்ரியுடனும் 'புந்தி ராலு' என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஜெமினி கணேசன் ‘சாம்பார்’ என அழைக்கப்பட்டது ஏன்? மகள் கமலா செல்வராஜ் சொன்ன சீக்ரெட்

Read more Photos on
click me!

Recommended Stories