‘நான் அடிவாங்குனா ஏத்துக்க மாட்டாங்க’னு சொல்லி ரஜினி ரிஜெக்ட் பண்ணிய சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?

Published : Mar 09, 2025, 12:10 PM IST

தான் அடிவாங்கும்படியான காட்சி இருந்ததால் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த படம் பின்னர் வேறு ஹீரோ நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
‘நான் அடிவாங்குனா ஏத்துக்க மாட்டாங்க’னு சொல்லி ரஜினி ரிஜெக்ட் பண்ணிய சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?

Rajinikanth Rejected Papanasam Movie : மலையாளத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் உருவாகி ஹிட்டனது. அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ரஜினிகாந்த் நழுவவிட்டாராம்.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் த்ரிஷ்யம். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் ஒட்டுமொத்த பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமின்றி சீனா, கொரியா போன்ற உலக மொழிகளிலும் ரீமேக் ஆனது. கொரிய மொழியில் ரீமேக் ஆன முதல் இந்திய படம் என்கிற பெருமையையும் த்ரிஷ்யம் படம் பெற்றது. இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்கிற பெயரில் எடுக்கப்பட்டது.

24
Papanasam

த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் பாபநாசம் படத்தையும் இயக்கினார். இதில் கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தை போல் தமிழிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் செய்தனர். முதல் பாகத்துக்கு நிகராக விறுவிறுப்புடன் இருந்த இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் அதன் மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... 7 ஆண்டுகளில் 7 முறை உருவான படம்; ஒவ்வொரு முறையுமே சூப்பர் ஹிட் தான்! வெளிநாட்டிலும் ரீமேக்!

34
Rajinikanth First Choice for Papanasam

இந்த நிலையில், த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிராகரித்தது ஏன் என்பது பற்றி பலரும் அறிந்திடாத தகவலை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி பாபநாசம் பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடம் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கை ரஜினியை வைத்து பண்ணலாம் என ஐடியா கொடுத்தாராம் தனஞ்ஜெயன். பின்னர் இதற்காக ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்த முதலில் படத்தை போட்டுகாட்டியிருக்கிறார்கள்.

44
Rajinikanth Reject Papanasam Movie

படத்தை பார்த்த ரஜினிகாந்துக்கு படம் மிகவும் பிடித்துப் போனாலும் நடிக்க மறுத்துவிட்டாராம். காரணம் என்னவென்றால், அதில் போலீசிடம் அடிவாங்கும்படியான காட்சி இருக்கும். அப்படி நான் அடிவாங்கும் காட்சியை என்னுடைய ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறிய ரஜினி, இது கமலுக்கு சூப்பராக இருக்கும் அவர் பல படங்களில் அடிவாங்கும்படியான காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று சொல்லி கமலிடமே போன் பண்ணி இந்த படத்தில் நடிக்க சொன்னாராம் ரஜினி. அதன்பின்னர் கமல்ஹாசன் நடித்து பாபநாசம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதாக தனஞ்ஜெயன் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த் ரிஜெக்ட் பண்ணி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்கள்

Read more Photos on
click me!

Recommended Stories