ஜெமினி கணேசன் ‘சாம்பார்’ என அழைக்கப்பட்டது ஏன்? மகள் கமலா செல்வராஜ் சொன்ன சீக்ரெட்
தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்த ஜெமினி கணேசன் சாம்பார் என அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றி அவர் மகள் கூறி இருக்கிறார்.
Kamala Selvaraj reveals why Gemini Ganesan trolled as sambar
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் கோலோச்சிய காலகட்டத்தில் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் ஜெமினி கணேசன். அதன் காரணமாக அவருக்கு காதல் மன்னன் என பெயர் வந்தது. ஜெமினி கணேசன் சினிமாவில் மட்டுமல்லாது ரியல் லைஃபிலும் ஒரு காதல் மன்னனாகவே வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு அவர் செய்த 4 திருமணங்களே சான்று.
Gemini Ganesan
ஜெமினி கணேசன் முதலில் அலமேலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மொத்தம் நான்கு மகள்கள். அதில் ரேவதி, கமலா செல்வராஜ், ஜெயலட்சுமி ஆகிய மூன்று பேரும் மருத்துவர்கள், மற்றொரு மகள் நாராயிணி பத்திரிகையாளராக பணியாற்றினார். அதேபோல் ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவியான புஷ்பவல்லிக்கு ரேகா, ராதா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ரேகா பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.
இதையும் படியுங்கள்... இத்தனை பிளாக்பஸ்டரா? விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் ப்ரேக் த்ரூவாக அமைந்த படங்கள்!
Gemini Ganesan nickname sambar
நடிகை சாவித்ரி தான் ஜெமினி கணேசனின் மூன்றாவது மனைவி, இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்கிற மகளும், சதீஸ் குமார் என்கிற மகனும் உள்ளனர். ஜெமினினி கணேசனின் நான்காவது மனைவி பெயர் ஜூலியானா ஆண்ட்ரூ, இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் ஜெமினி கணேசனின் முதல் மனைவிக்கு மகளாக பிறந்த கமலா செல்வராஜ் தன் தந்தை பற்றி யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.
kamala selvaraj
அந்த பேட்டியில், ஜெமினி கணேசன் சாம்பார் என அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது : “எனது தந்தை மிகவும் அழகாக இருப்பார். அதுமட்டுமின்றி அவர் ஒரு ஃபிட்னஸ் ஃபிரீக். அதனால் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இருப்பினும் அவர் அசைவம் சாப்பிடமாட்டார். அவர் ஒரு சைவ பிரியர் என்பதனால் அனைவரும் அவரை சாம்பார் என்று கூப்பிடுவார்கள்” என கமலா செல்வராஜ் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... த.வெ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக மாற்றம் செய்த விஜய்.. அப்படி என்ன செய்தார்?