டூரிஸ்ட் பேமிலி ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ

Published : May 01, 2025, 08:59 AM IST

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு நடிப்பில் வெளியாகி உள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

PREV
15
டூரிஸ்ட் பேமிலி ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ

Tourist Family Movie Twitter Review : புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் மே 1ந் தேதி உழைப்பாளர் தினமான இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

25
டூரிஸ்ட் பேமிலி படம் எப்படி இருக்கு?

ஃபீல் குட் படம்

சிம்பிளான ஃபீல் குட் படமாக டூரிஸ்ட் பேமிலி உள்ளது. சசிகுமாரும், அவருக்கு மகனாக நடித்துள்ள இருவரும் நன்கு ஸ்கோர் செய்துள்ளார்கள். சிம்ரனுக்கு ஸ்கோப் கம்மியாக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். யோகிபாபு காமெடி ஒர்க் ஆகி உள்ளது. பாடல் மற்றும் பின்னணி இசையும் சூப்பர். சசிகுமார் மது அருந்தும் காட்சி எமோஷனலாக இருந்தது. மெலோடிராமிக் படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக இருக்கிறது. நல்ல படம் பேமிலியாக பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.

35
டூரிஸ்ட் பேமிலி விமர்சனம்

அடுத்த லப்பர் பந்து

லப்பர் பந்து படத்தைப் போல் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து வெளிவந்துள்ள படம் தான் இந்த டூரிஸ்ட் பேமிலி. தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை குமரவேல் நிரூபித்துள்ளார். குட் நைட்டுக்கு பிறகு ரமேஷ் திலக் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ள படம் இது. எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பக்ஸ் இருவரின் கதாபாத்திரமும் காமெடியுடன் ரசிக்கும்படி இருந்தது. ஸ்ரீஜா ரவி சிறிது நேரம் வந்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் திறம்பட கையாண்டுள்ள இயக்குனர் அபிஷனுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

45
டூரிஸ்ட் பேமிலி ட்விட்டர் விமர்சனம்

ஒர்த் ஆன படம்

டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு கொடுக்கப்பட்ட ஹைப்புக்கு படம் நியாயம் சேர்த்துள்ளது. கதை, திரைக்கதை, இசை என அனைத்துமே சிறப்பு. காமெடி காட்சிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் காமெடி காட்சிகளுக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளது. படத்தில் சர்ப்ரைஸும் இருக்கு, அது தியேட்டரில் நன்கு ஒர்க் ஆகி உள்ளது. மனிதம் நிறைந்த மிடில் கிளாஸ் தந்தையாக சசிகுமார் மிளிர்கிறார். சிம்ரன் வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்தது போல் தாயாக சிறப்பாக நடித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

55
டூரிஸ்ட் பேமிலி எக்ஸ் தள விமர்சனம்

நெகிழ்ச்சியூட்டும் டூரிஸ்ட் பேமிலி

நகைச்சுவை கலந்த ஒரு அழகான உணர்ச்சிபூர்வமான நல்ல படம் இந்த டூரிஸ்ட் பேமிலி. எல்லாத் தடைகளுக்கும் எதிராக மனித நன்மையின் வெற்றியே படத்தின் அடிப்படைக் கரு. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்தின் திரைக்கதை மற்றும் கதை அருமையாக உள்ளது, கடைசி வரை உங்களை இப்படத்தின் கதை ஈர்த்து வைத்திருக்கும். சட்டவிரோத குடியேறிகள் எவ்வாறு தொடர்ந்து அச்சத்தில் வாழ்கிறார்கள் என்பது குறித்த உலகளாவிய பிரச்சினையையும் இப்படத்தில் சிறப்பாக கையாண்டுள்ளனர்.

சசிகுமார் குடும்பத் தலைவராக ஒரு கையுறை போல அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துகிறார், இன்றுவரை அவரது சிறந்த நடிப்பு இது. சிம்ரனுக்கும் என்ன ஒரு அருமையான பாத்திரம். குறிப்பாக சசிகுமாருடனான காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

ஆவேஷம் பட புகழ் மிதுனுக்கு தமிழில் இது ஒரு அற்புதமான அறிமுகம். துணை நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர், குமரவேல் மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையும் பின்னணி இசையும் அருமை. 2 மணி நேரம் 8 நிமிடங்களில் இது நெகிழ்ச்சியூட்டும். நீங்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories