நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து கலந்துகொண்டாலும், முன்னணி நடிகர்கள் சிலர் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.