நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?... செம்ம வெயிட்டு பார்ட்டியா இருக்காரேப்பா..!

First Published | Jan 4, 2024, 4:05 PM IST

நடிகர் ஜீவா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

JIIVA

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் கோலிவுட்டில் கோலோச்சிய சூப்பர் குட் பிலிம்ஸ் என்கிற முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன் ஆவார். 1991-ம் ஆண்டே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த ஆசை ஆசையாய் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஜீவாவின் தந்தை தான் தயாரித்து இருந்தார். இது அந்நிறுவனத்தின் 50-வது படமாகும்.

Jiiva birthday

ஆசை ஆசையாய் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அமீர் இயக்கத்தில் ராம், ராம் இயக்கிய கற்றது தமிழ், ஜனநாதன் இயக்கிய ஈ, போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்த ஜீவாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது சிவா மனசுல சக்தி தான். ராஜேஷ் இயக்கிய இப்படத்தில் நடுத்தர குடும்பத்து இளைஞனாக எதார்த்தமாக நடித்திருப்பார் ஜீவா. இதில் அவர் பேசும் மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்கிற டயலாக் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய் மீது செருப்பு வீச்சு... உடனடியா ஆக்‌ஷன் எடுங்க - கோயம்பேடு காவல்நிலையத்துக்கு பறந்த புகார்

Tap to resize

Actor Jiiva Family

பின்னர் கேவி ஆனந்த் இயக்கிய கோ, நடிகர் விஜய் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான நண்பன், கவுதம் மேனன் இயக்கிய நீ தானே என் பொன்வசந்தம், சுந்தர் சியின் கலகலப்பு 2 என முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார் ஜீவா. அண்மையில் இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகாததால் தற்போது தரமான கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் ஜீவா. இவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

Actor jiiva Net Worth

இந்த நிலையில் நடிகர் ஜீவா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு ரூ.95 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி நடிகர் ஜீவா தனது தந்தையின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தை நிர்வகித்தும் வருகிறார். அந்நிறுவனம் விரைவில் தங்களது 100-வது படத்தை தயாரிக்க உள்ளது. அதுவும் அப்படத்தில் நடிகர் விஜய்யை தான் ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஜீவாவே பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... அதே டீம்... ஆனா இயக்குனர் மட்டும் வேற! மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் குறித்து வெளிவந்த அறிவிப்பு

Latest Videos

click me!