அண்ணா சீரியலில் அதிரடி மாற்றம்... மிரட்டல் வில்லியாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை

First Published | Jan 4, 2024, 2:39 PM IST

மிர்ச்சி செந்தில் நாயகனாக நடிக்க ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் தற்போது வில்லியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரேட்டிங்கும் ஒவ்வொரு வாரமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் சௌந்தரபாண்டி தன்னுடைய தர்மகத்தா பதவியை பாதுகாத்து கொள்ள சண்முகத்தை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். 

ஷண்முகம் சூடாமணியின் வார்த்தையை ஏற்று தர்மக்கத்தா தேர்தலில் நின்று சௌந்தரபாண்டியின் தவறுகளை வெளியே கொண்டு வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். இப்படி அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அதிரடியாக களமிறங்க உள்ளார் ஸ்ரீலேகா ராஜேந்திரன், வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்த இவர் சின்னத்திரையிலும் எண்ணற்ற சீரியலில் நடித்து வருகிறார். 

இதையும் படியுங்கள்... Video: துபாயிலும் விடாமல் துரத்தி வீடியோ எடுத்த ரசிகர்கள்.. கோபத்தில் டக்குனு போனை பிடுங்கி டெலிட் செய்த அஜித்

Tap to resize

மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் நடித்து வரும் நிலையில் அண்ணா சீரியலில் பயங்கரமான வில்லியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சௌந்தரபாண்டியின் அக்காவாக பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இவரது காட்சிகள் சீரியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

நடிகை ஸ்ரீலேகா ராஜேந்திரன் 80-களில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு படங்கள் மூலம் கிடைக்காத பெயரும் புகழும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் கிடைத்தது. இதனால் சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து வந்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலுக்கு சென்றிருக்கிறார். அதில் வில்லியாக மிரட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... அதே டீம்... ஆனா இயக்குனர் மட்டும் வேற! மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் குறித்து வெளிவந்த அறிவிப்பு

Latest Videos

click me!